இன்று நிறைய பேர் மற்றவர்கள் பேசும் போது கவனமாகக்  கேட்பதில்லை. ஏனோ தானோ மென்று கேட்பார்கள். பேசும் போது அடிக்கடி குறுக்கிடுவார்கள். அவர்கள் அடுத்தவர்கள் தங்கள் கருத்தை முற்றிலும் சொல்ல விடமாட்டார்கள்.  தங்கள் கருத்துகளை மட்டுமே முன்னிருத்தி பேசுவார்கள். அடுத்தவரின் கருத்துகளுக்கு மரியாதை தர மாட்டார்கள். தாங்கள் சொல்லுவது தான் சரி என்று விவாதம் புரிவார்கள். அடுத்தவருக்கு ஒன்றும் தெரியாது என்றும் தனக்குத் தான்  எல்லாம் தெரியும் என்பது போலவும் நடந்துக் கொள்வார்கள். மற்றவர்கள் பேசும் போது கவனமாக கேட்டால் நமக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும். மற்றவர்கள் பேசும் போது கவனமாக கேட்பவரா நீங்கள்? மேலேபடியுங்கள்....



நீங்கள் மற்றவர்கள் பேசும் போது கவனமாக கேட்டால் அவர்களுக்கு உங்களை மிகவும் பிடித்து விடும். உங்களை அவர்கள் நல்ல மனிதர் என்பார்கள். மேலும் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகவும் நல்லவிதமாகவும் பேசுவார்கள். அதனால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படலாம். மேலும் நாம் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நமக்குத் தெரியாத பல விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்கள் பேசும் போது உன்னிப்பாக கவனித்தால் நீங்கள் பல விஷயங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்.

மேலும் நீங்கள் மற்றவர்கள் பேசுவதை நன்றாக கவனிக்கும் போது அவர்கள் உங்களை தங்கள் நம்பிக்கைக்கு உரியவராக நினைப்பார்கள். உங்களுக்கு கஷ்டம் வரும்போது அல்லது சாதாரண  நாட்களிலும் கூட அவர்கள் உங்களுக்கு பலவிதங்களில் உதவக் கூடும்.

மற்றவர்கள் பேசும் போது கவனமாகவும் , பொறுமையாகவும் கேளுங்கள். அது உங்களுக்குப் பல நன்மைகளை நாளடைவில் கொடுக்கும் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!



Post a Comment

 
Top