13 ஆம் எண்  துரதிர்ஷ்டமான எண்ணா? அது பயப்படவேண்டிய எண்ணா? குறிப்பாக  மேற்கத்திய நாடுகளில் 13 ஆம் எண் எல்லோரும் பயப்படும் எண்ணாக இருக்கிறது. எல்லா ஹோட்டல்களிலும் 13 ஆம் எண் உள்ள அறைகளையே பார்க்க முடியாது. அதே போல் 13 ஆம் எண் உள்ள Floor ஐ யும்  பார்க்க முடியாது. 12க்கு பின் 14 தான் வரும்.


13 ஆம் எண் ஏன் எல்லோரும் பயப்படும் துரதிர்ஷ்டமான எண்ணாக கருதப்படுகிறது? 'கடைசி விருந்தில்' கலந்துகொண்ட 13 அப்போஸ்தலர்களில் 13 வது  அப்போஸ்தலர் இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்ததாக கருதப் படுகிறது. பல தீயக் காரியங்கள், நிகழ்வுகள் 13 எண் சம்பத்தப்பட்டு நடந்திருப்பதாக கருதப்படுகிறது. அப்பல்லோ 13 தோல்வியுற்றது. நிறைய விமான விபத்துக்கள் 13 ஆம் தேதி நடந்திருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

சீனாவிலும் 13 ஆம் எண் துரதிர்ஷ்டமான எண்ணாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் சிலர் அந்த எண்ணைக்  கண்டு பயப் படத்தான் செய்கிறார்கள். இந்திய எண்  கணிதப்படி எண் 13 இராகுவைக் குறிக்கிறது. இராகு ஒரு பாபக் கிரகம். கஷ்டங்களையும், தடைகளையும் கொடுக்கக் கூடியவர். ஆகையால் 13 ஆம் எண்ணை சிலர் தவிர்க்கிறார்கள் என்பது நிஜம். நல்ல காரியங்களை அந்த தேதியில் வைக்க மாட்டார்கள்.

இந்திய ஜோதிடத்தின் படி இராகு ஜாதகத்தில் நல்ல இடங்களில் இருந்தால் நல்லதையே செய்வார். ஆனால் பொதுவாக 13 ஆம் எண் துரதிர்ஷ்டமான எண்ணாகவே பலரால் பார்க்கப் படுகிறது. என்னை பொருத்த மட்டில் எண்  13 ஜாதகத்தில் இராகு பலம் இல்லாதவர்களுக்கு மட்டுமே துரதிர்ஷ்டத்தை கொடுக்கும். மற்றவர்கள் 13 ஆம் எண் குறித்து பயப் படத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். ஒரு சாரார் இதை முழுமையான மூட நம்பிக்கை என்றே சொல்லுகிறார்கள்.

வாழ்க வளமுடன்!

வாஸ்து சாஸ்திரம் உண்மையா?

உங்கள் விதி எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி? 

Post a Comment

  1. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete

 
Top