சுமார் 30 அல்லது 40 வருங்களுக்கு முன் மக்கள் தொகைப்  பெருக்கம் என்பது ஒரு பெரிய சாபமாக இந்தியாவிலும் சீனாவிலும் பார்க்கப்பட்டது.  இந்த  நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு மக்கள் தொகைப்  பெருக்கமே முக்கியமான காரணமாக கருதப்பட்டது. அதனால் இரு நாடுகளுமே போட்டி போட்டுக் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டன.


இந்தியாவில் முதலில் நாம் இருவர் நமக்கு இருவர் என்று பிரச்சாரம் செய்தனர். பின் ஒரு குழந்தை போதுமே என்று பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது இந்திய அரசாங்கம். சீனாவோ ஒரு படி மேலே போய் 'ஒரு குழந்தை' கொள்கையை அறிமுகப்படுத்தியது. சீனாவில்  இன்று ஒரு கணவனும் மனைவியும் ஒரே ஒரு குழந்தை தான் பெற்றுக் கொள்ள முடியும். இந்த விதி சில சிறுபான்மையினருக்குப்  பொருந்தாது. மேலும் முதல் குழந்தை, பெண்ணாக இருந்தால் இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு விதி இருந்தது சீனாவில். எப்படியோ சீனா, மக்கள் தொகைப் பெருக்கத்தை மிக அழகாக கட்டுப்படுத்தி விட்டது என்பதே உண்மை.

மக்கள் தொகை ஒரு பெரிய சாபம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருந்த வேளையில், 90 களின் முடிவுகளில் தகவல் தொழில்நுட்பம் துறையில் இந்தியாவில் மிக அதிகமான வேலை வாய்ப்புகள் ஏற்பட்டன. நம்மை அடிமைப் படுத்தி ஆங்கிலம் கற்க வைத்த ஆங்கிலேயர்களுக்கு இந்த இடத்தில் நாம் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். நம் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்ததற்கு ஐ.டி துறை முக்கியக் காரணமாகும். நாம் சாபமாக நினைத்த மக்கள் பெருக்கம் நமக்கு வரமாகி விட்ட்து 2000 இல். சாபம் வரமானதற்கு காரணம் ஐ.டி துறையும், ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஆங்கிலமும் தான்.

மக்கள் பெருக்கம் என்றது இப்பொழுது மனித வளமாகி நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது. மக்கள் பெருக்கம் பொதுவாக சாபம் தான். ஆனால் அதே மக்கள் நன்றாக படித்து, கடுமையாக உழைக்க ஆரம்பித்தால் அந்த சாபமே வரமாகிப் போகும் என்பது நிஜம். 'குறைந்த விலையில் இந்தியாவில் மனித வளம் இருக்கிறது, வாருங்கள், எங்கள் மனித வளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்', என்று இன்று மோடி அவர்கள் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவதற்கு காரணம் சாபம் வரமாகி விட்டது தானே?

மக்கள் தொகைப் பெருக்கம் இந்தியாவுக்கு வரமா? அல்லது சாபமா? அன்று சாபம். இன்று வரம் என்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்

இந்தியாவைக் காப்பாற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை 

அனாவசிய செலவுகளைத்  தவிர்ப்பது எப்படி?


Post a Comment

 
Top