இன்று நாம் நவீன உலகத்தில் வாழ்கிறோம். ஒரு பக்கம், பிட்சா, பெர்கர், பப் என்று மேற்கத்திய கலாச்சாராம் இந்தியாவில்  ஊடுருவினாலும் இன்னும் உலகின் தலை சிறந்த ஆன்மிக நாடாகவே இந்தியா விளங்குகிறது. ஒரு புறம் பணத்தைத்  தேடி அலையும் இந்தியன் மற்றோரு புறம்  ஆன்மிகத்தையும் தேடிக் கொண்டிருக்கிறான் என்பது தான் நிஜம்.


ஆனால் எது உண்மையான ஆன்மிகம் என்பதில் தான் இப்பொழுது எல்லோருக்கும் குழப்பமாக இருக்கிறது. கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் போவது ஆன்மிகமா? பைபிளையும், பகவத் கீதையையும் படிப்பது ஆன்மிகமா? அலகு குத்தி காவடி எடுப்பது ஆன்மிகமா? மத குருமார்களுக்கு அடிமையாய் இருப்பது ஆன்மிகமா? மந்திரம், எந்திரம், பில்லி, சூன்யம் போன்றவை ஆன்மிகமா? பெரு நிருவனங்களைக்  குறி வைக்கும் பணக்கார சாமியார்களை பின் பற்றுவது ஆன்மிகமா?

இன்று ஆன்மிகத்தை தேடுபவர்களுக்கு பெருத்த குழப்பம் மிஞ்சுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க இயலாது. எது ஆன்மிகம் என்பதை முதலில் நாம் அறிய வேண்டும். தன்னை அறிவது தான் ஆன்மிகம். தன்னில் உள்ள இறைவனை அறிவது ஆன்மிகம். இந்த பிரபஞ்சத்தையும் இவ்வுலகில் உள்ள சகல ஜீவராசிகளையும்  நேசிப்பது ஆன்மிகம். 

தினமும் முறைப்படி தியானம் செய்தால் இறைவனுடன் தொடர்பு கொள்ள முடியும். பேரானந்தம் பெற முடியும். கவலைகள் கடந்து, பேரின்பத்துடன் இறுதி வரை வாழ முடியும். அது தான் உண்மையான ஆன்மிகம்.

வாழ்க வளமுடன்!


                            மரணத்தை வெல்லுங்கள் 

Post a Comment

 
Top