ஒவ்வொரு கிரகமும் இப்பூமியில் உள்ள மனிதர்களை ஒவ்வொரு விதமாக பாதிக்கிறது என்றே சொல்ல வேண்டும், சுக்கிரன் மனிதர்களின் காம உணர்வுக்கும், காதல் உணர்வுக்கும் காரணமாகிறான். மேலும் சுக்கிரன் ஒருவருக்கு செல்வம் மற்றும் வாகன யோகம் போன்றவற்றையும் தருபவனாகிறான். பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் சம்பந்தப்பட்ட வியாபாரம், டிராவல்ஸ், மற்றும் விலையுயர்ந்த இரத்தினக் கற்கள் சம்பந்தப்பட்ட வியாபாரம் போன்றவை சுக்கிரனின் ஆதிக்கத்தால் நடக்கின்றன எனலாம். சுக்கிரன் இளம் வயது ஆண்களையும், பெண்களையும் படுத்தும் பாடு கொடுமையானது என்றே சொல்ல வேண்டும்.



ஆண்களும் பெண்களும் வயது வரும் பொது காதல் வயப்படுகின்றனர். அதற்கு ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோனும் பெண்களுக்கு 
ஈஸ்ட்ரோஜன்  ஹார்மோனும் சுரப்பது தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுவார்கள்  அவற்றை சுரக்க செய்வது செய்வது சுக்கிரன் என்பது ஜோதிடர்களின் கருத்து ஆகும்.

ஒரு சிலர் அதிக காம இச்சை உடையவர்களாகவும், சிலர் சரியான அளவு காம உணர்ச்சி உள்ளவர்களாகவும், சிலர் மிதமான காம உணர்வு உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் அவர்கள் காம உணர்வு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தாலோ, நல்ல ஸ்தானத்தில் வீற்றிருந்தாலோ அவர் அதிகமாக காதல் வசப்படுபவராக இருப்பார். அவரால் பருவ வயதில் காம உணர்வுகளைக் கட்டுப்படுத்தவே முடியாது.

அதே போல் ஒருவர், துலாம்  அல்லது ரிஷப  ராசியில் பிறந்திருந்தாலோ, 6 அல்லது 15 அல்லது 24 தேதிகளில் பிறந்திருந்தாலோ சுக்கிர ஆதிக்கம் பெற்றவராவார். காதல் விவகாரங்களில் கட்டாயம் மாட்டிக் கொள்வார். அதே போல் விதி எண் 6 உடையவர்களும் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களே.

ஒரு சிலருக்கு வயிற்று பசி அதிகம் எடுப்பதை போல் சுக்கிர ஆதிக்கம் பெற்றவர்களுக்கு அதிக காமப்  பசி இருக்கும். அவர்களை பொம்பளைப் பொறுக்கிகள் என்றோ அல்லது வேசிகள் என்றோ சொல்லுவது தவறு என்றே நினைக்கின்றேன். வலிமை வாய்ந்த சுக்கிரன் அவர்களைப் பாடாய் படுத்தும் போது அவர்கள் என்ன செய்ய முடியும். மன்மதனின் அம்புக்கு யார் தப்ப முடியும்?

சுக்கிரனின் ஆதிக்கம் சுமாராய் உள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் வாலிப வயதில் மனதை எளிதாக கட்டுப்படுத்திக்கொள்ளுகின்றனர். அதீத சுக்கிர ஆதிக்கம் உடையவர்கள் இளம் வயதில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்கள் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்ளுகின்றனர்.

நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர்?

                         கற்பு என்னும் ஒரு மாயை 

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 





                                                         



Post a Comment

 
Top