உலகமெங்கும் கலாச்சார மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டுதானிருக்கின்றன. மனிதன் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிகளாலும் பொருளாதார வளர்ச்சிகளாலும் மிகவும் மாறித்தான் போய் விட்டான் என்றே தோன்றுகிறது.  மனிதனின் வாழ்க்கை முறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று   சொன்னால்  அது மிகையாகாது. மனிதனின் காதல் வாழ்க்கையும் மாறிப்போனது காலத்தின் கட்டாயமா? ஓரினச்  சேர்க்கை உலகெங்கும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஓரினத் திருமணங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டன. ஓரினத் திருமணம் சரியா? மேலே படியுங்கள்.....


மனிதன் இயற்கையை விட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறான். அதிகமான இரசாயன உபயோகங்கள், இயற்கை செல்வங்களை அழிப்பது போன்ற காரியங்களால்  மனிதன் இயற்கைக்கு அந்நியமாகிக் கொண்டு போகின்றான் என்பது நிஜம். காதல் வாழ்க்கையிலும் இயற்கைக்கு அந்நியமாகிப் போவதில் வியப்பு எப்படி இருக்க முடியும்? அதனால் தான் இன்று ஓரினச்  சேர்க்கை மற்றும் ஓரினத் திருமணங்கள் பரவலாகிக் கொண்டிருக்கின்றன.

வயதானவன் இளம்பெண்ணை காதலிப்பதும், இளைஞன் பாட்டியை காதலிப்பதும், ஆணை ஆணே  காதலிப்பதும், பெண்ணை பெண்ணே காதலிப்பதும் இந்த கலியுகத்தில் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

ஓரினத் திருமணம் சரியா? அதை அனுமதித்து சட்டமாக்கலாமா என்று உலகெங்கும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாடுகளில் அதை சட்டப்படி அனுமதித்தும் விட்டார்கள். 

மனிதன் முற்றிலும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதில் மாற்றுக்  கருத்து இருக்க முடியாது. பாலியல் சேர்க்கை மற்றும் திருமணம் என்பது ஒருவர் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள் ஆகும். சொல்லப் போனால் உலகமே இந்த விஷயங்களை வைத்து தான் சுழன்று கொண்டிருக்கிறது  என்றே தோன்றுகிறது.

ஒரு பெண்ணுக்கு மற்றொருப் பெண்ணை திருமணம் செய்யத் தான் விருப்பம் என்றால் செய்து விட்டுப் போகட்டுமே? இளைஞனுக்கு கிழவியைத் தான் மணம் செய்ய விருப்பம் என்றால் செய்து விட்டுப் போகட்டுமே? உண்மையில் அப்படிப்பட்ட இருவர் சந்தோஷமாக வாழ முடியும் என்றால் அதைத்  தடுக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

யாரைத்  திருமணம் செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. உண்மையான புரிதலுடன் சந்தோஷமாக வாழ்வீர்களா என்பது தான் முக்கியம் என்றே நினைக்கின்றேன். மகிழ்ச்சிகரமாக வாழ்வீர்கள் என்றால் ஓரினத் திருமணம் கூட சரி தான் என்றே எனக்குத் தோன்றுகிறது.  அதை சட்டப்படி அனுமதிப்பதும் தவறில்லை என்றே தோன்றுகிறது. 

மனிதனுக்கு மனிதன் எவ்வளவோ வித்தியாசப்படுகின்றான். நமக்கு அருவெறுப்பாகத் தெரியும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு சொர்க்கமாகத்  தெரிந்தால் நாம் அவர்கள் சொர்க்க வாசலை ஏன் அடைக்க வேண்டும்? மனித வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது. அதை அவர்கள் சந்தோஷமாக வாழ வழி விட வேண்டும் என்பது தான் என் கருத்து ஆகும். உங்கள் கருத்து வேறுபடலாம். 

வாழ்க வளமுடன்!

கற்பழிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறதா?

விவாக ரத்து இந்தியாவில் அதிகரிப்பது ஏன் 





Post a Comment

  1. iஇது ஹோனோன்கள் சம்பந்தப்பட்ட விடயம்.ஆர்ம்ப காலங்க்கலில் இது பற்றிய அறிவு பரவலாக இருக்கவில்லை. ஆனால் இப்போ இதுபற்றிய அறிவு வளர வளர ஏற்றுக்கொள்ளுதலும் அவசியமாகின்றது.

    ReplyDelete

 
Top