விதி என்று ஒன்று இருக்கிறதா? இதற்கு ஆம் என்று பலரும் இல்லை என்று சிலரும் பதில் சொல்லுவார்கள். பொதுவாகவே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் விதியை நம்ப மாட்டார்கள். அவர்கள் தங்கள் முயற்சியால் வெற்றி பெற்றதாகவும் தோல்வியுற்றவர்கள்  எல்லாம் சோம்பேறிகள் என்றும் ஆணித்தரமாக அல்லது கர்வமாகக்  கூறுவார்கள். விதி என்று ஒன்றும் இல்லையா? அல்லது  எல்லாம் விதிப்படி தான் நடக்கிறதா? மேலே படியுங்கள்.......


நமது விதியை நாம் தான் உருவாக்குகிறோமா? ஒரு சிலர் நமது விதியை நாம் தான் உருவாக்குகிறோம் என்று உறுதியாக நம்புகிறார்கள். நமது விதியை நாம் உருவாக்க முடியும் என்பது ஓரளவுக்குத் தான் உண்மை. அதற்கும் விதி இருந்தால் தான் முடியும் என்று விதி மீது நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லுவார்கள். சிலர் புகழ் மிக்க டாக்டராக வேண்டும் என்று நினைத்து, உழைத்து பெரிய டாக்டராக ஆகி விடுகின்றனர் என்பது உண்மை தான். ஆனால் அதை வைத்து நம் விதியை நம்மால் நிச்சயம் நினைத்த மாதிரி உருவாக்க முடியும் என்று  உறுதியாக சொல்ல இயலாது.

நாம் தான் நம் விதியை உருவாக்குகிறோம் என்றால், பிறக்கும் போதே புற்று நோய் போன்ற பெரிய வியாதிகளுடன் பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கையை தீர்மானித்தது யார்? எத்தனையோ திறமைசாலிகள் புகழ பெற முடியாமல் காணாமல் போவது ஏன்? அதிக திறமை இல்லாதவர்கள் மிக உயர்ந்த இடத்தை அடைவது எஞ்ஞனம்? சம்பந்தமே இல்லாமல் சிவனே என்று நடை பாதையில் சென்ற ஒருவர் மீது லாரி ஏறி கொன்று விடுவதை என்னவென்று சொல்லுவது? இறந்தவர் அவரது விதியை அவரே உருவாக்கிக் கொண்டாரா?

விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. நம்மை மீறிய சக்தி நம்மை மிகப் பெரிய வெற்றிகளைப் பெறவோ அல்லது பெரிய தோல்விகளை சந்திக்கவோ அல்லது மரணத்தைக் கூட அடையவோ செய்கிறது என்பது நிஜம்.

நாம் நமது விதியை உருவாக்க முயற்சி செய்வது சரியான அணுகு முறை தான். ஆனால் நம்மால் நிச்சயம் நமது விதியை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது தவறான கருத்தாகும். விதியின் அனுகூலம் நமக்கு பூரணமாக இருந்தால் தான் நம் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். விதியின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நம் கடின உழைப்பிற்கான நல்ல பலனை நாம் அனுபவிக்க  முடியும்.

நாம் நம் விதியை உருவாக்க எண்ண  வைப்பதும் விதியே எனலாம். கூட்டிக்  கழித்துப் பார்த்தால் எல்லாம் விதிப்படி நடப்பதாகவே தோன்றுகிறது.

வாழ்க வளமுடன்!

மறு பிறவி உண்டா?

நல்லவர்கள் கஷ்டப்படுவதேன்?


Post a Comment

 
Top