அற்புதங்கள்: அற்புதங்கள் வாழ்க்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடந்துக் கொண்டுதானிருக்கின்றன. ஒரு சிலருக்கு அற்புதங்கள் கொஞ்சம் அதிக அளவில்  நடக்கின்றன. பலருக்கு என்றாவது ஒரு நாள் அற்புதங்கள்  நடக்கின்றன. அற்புதங்கள் என்றால் என்ன? அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டுமா? மேலே படியுங்கள்.......


அற்புதங்கள் என்றால் என்ன? மிகவும் ஆபத்தான தருணங்களில் நம்மை மீறிய சக்தி நம்மை கடைசி நிமிடத்தில் காப்பாற்றுவது. அல்லது எதிர்பாராமல் நடக்கவே முடியாத மிகவும் நல்ல விஷயம் நமக்கு நடப்பது. நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு கார் கொடூரமான விபத்துக்குள்ளாகி உள்ளே இருந்த ஒருவர் சிறிய காயம் கூட இல்லாமல் தப்பிப்பது போன்ற நிகழ்வுகளை. எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்த ஒரு சிலர் சிறிய காயம் கூட இல்லாமல் உயிர் பிழைப்பதையும்  நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  டாக்டரால் கை விடப்பட்ட எத்தனையோ நோயாளிகள் திடீரென்று நோய் குணமாகி நல்ல ஆரோக்கியம் பெறுவதைப் பார்த்திருப்பீர்கள். இவை எல்லாம் அற்புதங்களின்றி வேறு என்னவாயிருக்க முடியும்?

அற்புதங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டுமா? சிலருக்கு அற்புதங்கள் தானாகவே நடக்கும். அவர்கள் எல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு சிலருக்கு அதீதிய பக்தியால் நிகழும். மேலும், நீங்கள் தினமும் முறையாக தியானம் செய்தால் பிரபஞ்ச ஷக்தியுடன்  அதாவது கடவுளுடன் தொடர்பு ஏற்படும். நீங்கள் இயற்கையுடன் ஒத்து வாழ்வீர்கள் என்றே சொல்லலாம். நீங்கள் எவ்வளவுக்கவ்வளவு பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொள்ளுகிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்களுக்கு அற்புதங்கள் நடக்கும் என்று சொல்லலாம்.

சிறிய, பெரிய அற்புதங்கள்: பெரிய அற்புதங்கள் என்றாவது தான் நடக்கும். ஆனால் சின்ன சின்ன அற்புதங்கள் முறையாக தினமும் தியானம் செய்பவர்களுக்கு நிச்சயம் அடிக்கடி நடக்கும் என்பதில் ஐயமேயில்லை. நான் சொல்லுவது ஒழுங்காக தியானம் செய்பவர்களுக்கு எளிதாக புரியும். 

தியானம் செய்யுங்கள். அற்புதங்களை நடத்திக் காட்டுங்கள். வாழ்க வளமுடன்!

   யோகாவின் நன்மைகள் 

உங்கள் மனதின் அற்புத சக்திகள் 

Post a Comment

 
Top