இணைய தளம் இன்று நமக்கு தகவல் களஞ்சியமாக உள்ளது. நமக்கு எந்த தகவல் வேண்டுமென்றாலும் வீட்டில் உட்கார்ந்தபடியே இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம். நூலகம் செல்ல வேண்டியதில்லை. நிபுணர்களை சந்திக்க வேண்டியதில்லை. எல்லாத் தகவல்களும் நம் விரல் அசைவு மூலம் (Click of mouse ) இன்று நாம் பெறுகிறோம். ஆனால் இணையதளத்தில் தேவைக்கு அதிகமாக தகவல்கள் உள்ளன. சரியான தகவல்கள், தவறான தகவல்கள் என்று எல்லாம் கலந்தே  உள்ளன. நாம் எப்படி நமக்குத் தேவையான சரியான தகவல்களை கண்டு பிடிப்பது? மேலே படியுங்கள்........



பொதுவாக நாம் இணையதளத்தில் தகவல் பெற கூகிள்  (Search Engine) ஐத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதிலும் முதல் பக்கத்தில் உள்ள வலைத்தளங்களிலேயே நாம் பெரும்பாலும் நமக்குத் தேவையான தகவல்களை ப் பெற்று விடுகிறோம். 

கூகுள்  முதல் பக்கத்தில் உள்ள வலைத்தளங்கள் நம்பத்தகுந்தவையா? நிச்சயமாகக்  கூற முடியாது என்பது தான் உண்மை. முதல் பக்கத்தில் உள்ள வலைத்தளங்கள் சரியான தகவல்களையும் உங்களுக்கு கொடுக்கலாம். அல்லது தவறான அல்லது தெளிவற்ற ஊகத்தின் அடிப்படையிலான  தகவல்களையும் கூட  கொடுக்கலாம்.

ஒரு வலைப்பதிவு (blog post) சுமாரான தகவல்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் அதை சில யுக்திகளைப் (Search Engine Optimazation Techniques) பயன்படுத்தி கூகிளின் முன் பக்கத்தில் கொண்டு வந்திருப்பார்கள். ஆகையால் ஒரு வலைப்பதிவு கூகிளின் முன் பக்கத்தில் இருப்பதால் மட்டுமே அது சரியான தகவல்களைக் கொண்டிருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

அப்படி என்றால் ஓரளவுக்கு சரியான தகவல்களைப் பெறுவது எப்படி? அந்த வலைப்பதிவை எழுதியவர் அந்த துறையில் நிபுணரா என்று கவனியுங்கள். உதாரணமாக யோகா, மற்றும் தியானம்  பற்றிய ஒரு வலைப் பதிவு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை எழுதியவர் ஒரு யோகா குருவாக இருந்தாலோ அல்லது ஒரு தகுதி பெற்ற ஆயுர்வேத வைத்தியராக இருந்தாலோ அந்தத்  தகவல்கள் நம்பத்தகுந்தவை எனலாம்.

கூகிள் பெரும்பாலும் நல்ல தரமான வலைப்பதிவுகளை முன் பக்கத்தில் இடம் பெறச்செய்யும். வேறு சில வலைப்பதிவுகளையும் படித்து சரியான தகவல்களை பெற்று விடலாம். கொஞ்சம் இந்த விஷயத்தில் அனுபவம் பெற்ற பின், நம்மால் சரியான தகவல்களையும், தவறான தகவல்களையும் அடையாளம் கண்டுக் கொள்ள முடியும்.

இணையதளத்தில் தேவைக்கு அதிகமான தகவல்கள் குவிந்துள்ளன. இணையதளத்தில் குப்பைகளும் உண்டு. வைரங்களும் உண்டு. சரியான விஷயத்தை எடுத்துக் கொள்வது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. தவறான மருத்துவத்  தகவல்களைப் படித்து உடலைக் கெடுத்துக் கொண்டவரும் உண்டு. நல்ல தகவல்களை  இலவசமாகப் பெற்று பயன் அடைந்தவரும் ஏராளம் உண்டு என்பதையும் மறுக்க முடியாது.

இணையதளம் என்பது ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கையில் உள்ள கத்தி போன்றது ஆகும். அது ஒரு உயிரைக் காப்பாற்றவும் உதவும். ஒருவரைக் கொல்லவும் பயன்படும். அறுவை சிகிச்சை நிபுணர் கத்தியை எப்படி சரியாக பயன் படுத்துகிறாரோ அது போல் நாம் இணையதளத்தை சரியாக பயன் படுத்தினால் நன்மைகள் கோடி உண்டு எனலாம்.

வாழ்க இணைய தளம்! 

வாழ்க வளமுடன்!

தமிழ் வலைப்பதிவாளர்கள் பணம் சம்பாதிக்க வாய்ப்பு 

உங்கள் பணப்பிரச்சினைக்குத் தீர்வு 

Post a Comment

 
Top