நீங்கள் இளைஞனாக அல்லது இளைஞியாக இருந்த போது உங்களுக்கு எத்தனையோ இலட்சியங்கள், கனவுகள் இருந்திருக்கலாம். டாக்டராக நினைத்தவரெல்லாம் சாப்ட்வேர் என்ஜீனியர் ஆகியிருக்கலாம். சாப்ட்வேர் என்ஜீனியர் ஆக நினைத்தவரெல்லாம்  'BPO' வில் குப்பைக் கொட்டிக்கொண்டிருக்கலாம். கோடீஸ்வரனாக ஆக நினைத்தவரெல்லாம் சாப்பாட்டிற்கே சிங்கி அடிக்கலாம். காதலித்தவரைக் கைப் பிடிக்க முடியாமல் போய் இருக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் நினைத்த அளவுக்கு சாதிக்கமுடியவில்லையா? எதனால் உங்களால் சாதிக்க முடியவில்லை? மேலே படியுங்கள்.......


வாழ்க்கையில் நினைத்தபடி சாதிப்பவர்கள் 1 சதவிகிதம் கூட தேறாது என்பது தான் நிஜம். மீதி எல்லோரும் அப்படி ஆகியிருந்திருக்கலாமே, இப்படி ஆகியிருந்திருக்கலாமே என்று உங்களையும் என்னையும் போல் வருந்திக் கொண்டிருப்பவர்கள் தான். ஒரு சில அதிர்ஷ்டசாலிகள் மட்டும் நினைத்ததை விட அதிகமாகவே சாதிக்கின்றார்கள் என்பதையும் மறுக்க முடியாது,

எதனால் நாம் நினைத்ததை சாதிக்க முடியவில்லை? 

1. நம்முடைய கனவுகள் அல்லது இலட்சியங்கள் நமது சக்திக்கு மீறியதாக இருந்திருக்கலாம்.

2. அதற்குத் தேவையான புத்திசாலித்தனம் அல்லது திறமை அல்லது பண பின்புலம் நமக்கு இல்லாதிருந்திருக்கலாம்.

3. நாம் கடுமையாக உழைக்கத் தவறியிருக்கலாம்.

4. நமக்கு போதிய அனுபவம் அல்லது ஆதரவு இல்லாதிருந்திருக்கலாம்.

5. துரதிர்ஷ்டம் நம்மை துரத்தி வந்திருக்கலாம்.

நாம் சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை என்பதை நாம் முதலில் தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் இப்பொழுது எந்த நிலையில் இருந்தாலும் சந்தோஷமாக வாழப்  பழக வேண்டும். அதே சமயம் நாம் நம் இலட்சியங்களை  அல்லது கனவுகளை கை விட வேண்டிய அவசியம் இல்லை. எந்த வயதிலும் நாம் சாதிக்க முடியும் என்பதே  உண்மை.  நெல்சன் மண்டேலா , காந்திஜி, அன்னை தெரசா, பெரியார்  போன்ற எத்தனையோ பேர் வயதான பின்னும் சாதனைகள் புரிந்துள்ளனர் என்பதை நாம் மறக்கலாகாது.

It's Never Too Late to Accomplish Your Goals and Dreams

வாழ்க வளமுடன்!




Post a Comment

 
Top