ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், நம்பிக்கை இல்லாதவர்களும் சனிப் பெயர்ச்சிப் பலன்களைப் பத்திரிகைகளில் படிப்பதும், தொலைக்காட்சிகளில் கேட்பதும் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். சனி பகவான் திருக்கணிதம் பஞ்சாங்கத்தின் படி நவம்பர்  2ம் தேதியே துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகி விட்டார், வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 16ம் தேதி பெயர்ச்சி ஆகி விட்டார். சனிப் பெயர்ச்சி உங்களைப் பாதிக்குமா? மேலே படியுங்கள்.........



முதலில் ஒரு விஷயம் நாம் முக்கியமாக புரிந்துக் கொள்ள வேண்டும். சனிப்பெயர்ச்சி பலன், குருப் பெயர்ச்சி பலன்  என்பது எல்லாம் கோச்சார பலன்களே. அதாவது அந்த கோள்கள் இன்று இருக்கும் இடத்தின் நிலவரப்படி கொடுக்கும் தற்காலிகமான பலன்கள் தான் அவை. நாம் பிறக்கும் போது கோள்கள் நின்றிருந்த நிலவரப்படி தான் இன்று நம் தசா  புத்திப் பலன்கள் நடைப்  பெற்று  வரும். அந்த தசாப் புத்திப் பலன்கள் தான் சுமார் 75% இன்று உங்களுக்கு நடை பெறும். குருப்  பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எல்லாம் சுமார்  25% தான் உங்களுக்கு தற்போது நடை பெறும்.

அதாவது நீங்கள் பிறந்த போது கோள்கள் நின்றிருந்த நிலவரப்படி தான் இன்று உங்களுக்கு நல்ல அல்லது கெடுதல் பலன்கள் நடக்கும். அதாவது இன்றைய உங்களது தசாப்புத்தி பலன்கள்  நன்றாக இருந்தால் சனியும், ராகுவும் , கேதுவும், குருவும் கோட்சாரத்தில் மோசமான இடத்தில் இருந்தாலும் உங்களுக்கு நல்ல பலன்களே அதிகம் நடக்கும். ஜாதக பலனும் தற்சமயம் மோசமாக இருந்து, கோட்சார பலனும் மோசமாக இருந்தால் நீங்கள் நிச்சயம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் என்றே சொல்லுவேன்.

அதாவது நாம் முக்கியமாகத் தெரிந்துக் கொள்ளவேண்டியது என்னவென்றால், ஜாதகப்பலன் நன்றாக இருப்பவர்கள்  சனிப்பெயர்ச்சிகளுக்குப்  பயப்படத் தேவை இல்லை என்பது தான்.

அது சரி, இந்த சனிப்பெயர்ச்சி யார் யாருக்கு நல்லது செய்யும்? எந்த ராசிக்காரர்களுக்குத்  தீங்கு செய்யும்?  கன்னி, மிதுனம், கும்பம், மகர ராசிக்காரர்களுக்கு நன்மை செய்யும் எனலாம். தனுசு, விருச்சிகம், துலாம், மேஷம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு தீமை செய்யும். மற்ற ராசிக்காரர்களுக்கு சுமாரான  பலன்களே  நடைபெறும்  எனலாம்.

சனிப்பெயர்ச்சியின் தீமை பலன்களிலிருந்து விடு பட என்ன செய்ய வேண்டும்?  தினமும் காக்கைக்கு உணவு வைக்கலாம். சனி பகவானுக்கு எள்  தீபம் ஏற்றலாம். சனிக்கிழமை ஏற்றுவது விசேஷம். விநாயகரையும் ,ஆஞ்சநேயரையும் வழிபடலாம்.சனிக்கான மந்திரங்களை ஜெபிப்பதும் நல்ல பலன்களைக்  கட்டாயம் தரும் என்பதில்  ஐயம் வேண்டாம். தினமும் தியானம் செய்தாலும் கெடு பலன்கள் குறைந்து நற் பலன்கள் அதிகரிக்கும்.

வாழ்க வளமுடன்!

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 

15 முக்கியமான வாஸ்து விதிகள் 

சனிக்கான மந்திரங்கள்:






Post a Comment

 
Top