தன்னம்பிக்கை எல்லோருக்கும் மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சுய மரியாதையும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால் சிலர் தன்னம்பிக்கையுடன் தலைக்கனமும் கொண்டிருப்பார்கள். தலைக்கனம் சற்று தூக்கலாக இருக்கும் இவர்களிடத்தில். இவர்கள் மற்றவர்கள் உணர்ச்சிகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். தன்னை மட்டுமே எங்கும் எதிலும் பிரதானப்படுத்துவார்கள். மற்றவர்களைக் காயப்படுத்துவதைப் பற்றியோ அவர்களின் உரிமைகளைப் பற்றியோ இவர்கள் கவலைப்படுவதேயில்லை.
தலைக்கனம் பிடித்தவர்கள் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் நடந்து கொள்வார்கள். தன்னை எல்லோருக்கும் பிடிக்குமென்று கற்பனை செய்துக் கொள்வார்கள். மற்றவர்களை இகழ்ச்சியாய் பேசத் தயங்கவே மாட்டார்கள். இவர்களைப் பார்க்கும் போது கொடுங்கோல் மன்னர்கள் நினைவில் வருவார்கள். லோக்கல் தாதாக்களைப் போல் நடந்துக் கொள்வார்கள் எனவும் சொல்லலாம்..
இவர்களுக்குத் திறமை இருக்கலாம். ஆனால் தலைக்கனம் திறமையை விட அதிகம் இருப்பதால் இவர்களை எல்லோரும் வெறுப்பர். இவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெற இயலாது.
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் இவ்வளவு நேசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவரின் பணிவும் அடக்கமும் தான். மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருப்பதால் தான் அவரை அத்தனைக் கோடி மக்கள் நேசிக்கிறார்கள். என்னையும் சேர்த்து தான்.
தலைக்கனத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு சிறு மயிரிழை தான் வித்தியாசம். எனக்கு நன்றாக எழுத வரும் என்று நான் சொன்னால் அது தன்னம்பிக்கை. எனக்கு மட்டும் தான் நன்றாக எழுத வரும், மற்றவர் எல்லாம் எழுதுவது குப்பை என்று நான் சொன்னால் அது தலைக்கனம் தானே? தன்னம்பிக்கையோடு வாழ்வோம். சுய மரியாதையோடு வாழ்வோம். ஆனால் தலைக்கனம் மட்டும் வர நாம் அனுமதிக்கவே கூடாது. தலைக்கனம் இல்லாத தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். பணிவுடன் கூடிய தன்னம்பிக்கையே உயர்வு தரும்.
வாழ்க வளமுடன்!
ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்கு நல்லதா?
வீண் விவாதங்களினால் என்ன பயன்?

Post a Comment