இவ்வுலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு சிலரே கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடிகிறது. மற்றவரெல்லாம் இந்திய பட்ஜெட் போல் என்றும் பற்றாக்குறையுடனேயே  இறுதி வரை வாழ்கின்றனர்.  நீங்கள் ஏன்  பணம் சம்பாதிக்க முடியவில்லை? நீங்கள் பணக்காரராக ஆகாததற்கான 10 காரணங்கள் இதோ இதோ.



1. நீங்கள் பிறப்பால் ஏழையாக பிறந்தவர். மேலும் நீங்கள் பணக்காரராக பெரிசாக எதுவும் முயற்சி எடுக்க வில்லை.

2. ஒரு வேளை  நீங்கள் பணக்காரராக பிறந்திருந்தாலும் இன்று நீங்கள் ஏழையாக இருப்பதற்குக்  காரணம் அந்த பணத்தை நீங்கள் ஊதாரித்தனமாக செலவு செய்திருக்கலாம். பெரிதாக உழைக்காமல், வருமானம் இல்லாமல் செலவு செய்து இருந்த பணத்தை  எல்லாம் இழந்திருக்கலாம். 'எங்க ஊரிலேயே முதல் முதலில் கார் வாங்கியது  நான் தான். ஊரிலேயே ஒரே மெத்தை வீடு எங்களுடைய வீடு தான் அப்பொழுது' என்று வீ ணாப்  போன ஒருவனுடன் வெட்டிக் கதை பேசிக்கொண்டிருப்பீர்கள் இப்பொழுது.

3. வாழ்க்கையில் சில சமயம் நாம் துணிந்து முடிவு எடுக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு சின்னப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் பணக்காரராக ஆகவே முடியாது. 'அப்படி ஆகி விட்டால், இப்படி ஆகி விட்டால்' என்று பயந்து கொண்டிருந்தால் ஏழையாகவே காலத்தை ஓட்ட வேண்டியது தான்.

4. 'பணக்காரனாக ஆக வேண்டும்' என்கின்ற வெறி இருந்தால் மட்டுமே பணக்காரனாக முடியும். அந்த வெறி இல்லாதவர்கள் எல்லாம் வெற்று வேட்டுக்களாக வீணாகிப் போவர்.

5. ஒரு வேளை  உங்களுக்கு அந்த வெறி இருந்தாலும் நடுவில் ஏற்பட்ட தோல்விகளால் நீங்கள் உங்கள் முயற்சிகளைக்  கை விட்டிருப்பீர்கள். பணக்காரனாக வேண்டுமென்றால் விக்கிரமாதித்தன் போல் மீண்டும் மீண்டும் சற்றும் தளராமல் முயற்சிக்க வேண்டும்.

6. நீங்கள் கடுமையாக உழைக்க வில்லை. வாய் பந்தல் போட்டுக்கொண்டு காற்றிலே கோட்டைக் கட்டிகொண்டிருந்திருப்பீர்கள்.

7. நீங்கள் புத்திசாலித்தனமாக உழைத்திருக்க மாட்டீர்கள். கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது. புத்திசாலித்தனமும் வேண்டும் வெற்றி பெறுவதற்கு.

8. பணத்தை சரியாக நிர்வகிக்கத்தெரிய வெண்டும். பண விஷயங்களில் சரியான முடிவுகள் எடுக்கத் தெரிந்தவரே பணக்காரராக முடியும்.

9. நீங்கள் வரவுக்கு மேல் செலவு செய்பவராக இருக்க வெண்டும். நீங்கள் ஒரு கோடிரூபாய் சம்பாதித்தாலும் இரண்டு கோடி செலவு செய்பவராக இருந்தால் நீங்கள் எப்படி பணக்காரராக முடியும்? மாறாக கடன்காரனுக்குப் பயந்து மறைந்து தான் வாழ வேண்டியிருக்கும்.

10. எல்லாவற்றிற்கும் மேலாக கொஞ்சம் அதிர்ஷ்டமும் நம் வாழ்க்கையில் இருந்தால் தான் நாம் பணக்காரராக முடியும். கோடீஸ்வரனாகும் யோகம் இருந்தால் தான் பணக்காரனாக முடியும்.

வாழ்க வளமுடன்! 

கடினமாக உழைத்தும் வெற்றி பெற முடிய வில்லையா?

முக்கோண வெற்றி சூத்திரம் 

Post a Comment

 
Top