விஞ்ஞானிகள் எதிலும் அறிவுப்பூர்வமான                   சான்றுகளை எதிர்பார்ப்பார்கள். ஆதாரப்பூர்வமான சான்றுகள் இல்லை என்றால் எதையும் நம்ப மாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது எத்தனையோ விஞ்ஞானிகள் கடவுளை மட்டும் நம்புவது எப்படி என்ற கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு  விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்கின்றபோதும் எத்தனையோ  விஞ்ஞானிகள்  கடவுளை நம்புகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


விஞ்ஞானிகள் நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டுமா? அல்லது அவர்களும்  ஆத்திகர்களாக இருக்கலாமா? எல்லோருக்கும் கடவுளை நம்புவதற்கோ அல்லது மறுப்பதற்கோ உரிமை உண்டு. விஞ்ஞானிகளும்  கடவுளை நம்பலாம், தப்பில்லை.

சில விஷயங்களை நம்மால் உணர முடியும். ஆனால் நிரூபிக்க முடியாது. தென்றலை உணர முடியும். பார்க்க முடியுமா? எந்த ஒரு படைப்பும் தானாக உருவாவதில்லை. யாரோ ஒருவர் தான் உருவாக்கியிருக்க வேண்டும். அற்புதமான இந்த பிரபஞ்சத்தை நிச்சயம் ஒருவர் அல்லது ஒரு சக்தி உருவாக்கியிருக்க வேண்டும். அந்த ஒருவர் அல்லது சக்தி தான் கடவுள் என்று ஆத்தீகவாதிகள்  முழுமையாக நம்புகின்றனர்.

இன்று விஞ்ஞானம்  ராக்கெட் வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சிகளால் நாத்தீகவாதிகள் எண்ணிக்கை உயரலாம். அல்லது விஞ்ஞானிகள் கடவுளை கண்டு பிடிக்கலாம். எது எப்படி இருப்பினும், ஒன்று மட்டும் நிச்சயம்.

உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இறைவனிடம் ஒன்றைக் கேட்கும் போது அது நிச்சயம் கொடுக்கப்படும் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? விஞ்ஞானிகள் எல்லோரும் நாத்திகர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?



Post a Comment

 
Top