ஜோதிடம் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஜோதிடத்தை நம்பாதவர்கள் கூட ராசிப் பலன் பார்ப்பார்கள். ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று ஜோதிடர்கள் சூடம் அடித்து சத்தியம் செய்வார்கள். ஜோதிடத்தை நம்பாதவர்களோ அதை நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.ஜோதிடம் ஒரு குப்பை என்று சொல்லுபவர்களும் உண்டு. அது வெறும் ஏமாற்றும் வேலை என்றும் சிலர் சொல்லுவர். ஆனால் ஜோதிடம் நிச்சயம் ஒரு கலை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.


அது சரி, விஞ்ஞானம் என்றால் என்ன? ஒரு விஷயத்தை திட்டமிட்டு ஆராய்ந்து உண்மையைக்  கண்டு பிடித்து சொல்லுவது தான் விஞ்ஞானம். எத்தனை முறை சோதனை செய்தாலும் ஒரே ஒரு விடை தான் விஞ்ஞானத்தில் வரும். உதாரணமாக, இன்று நாம் செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ராக்கெட் அனுப்புவதைச்  சொல்லலாம். எத்தனையோ பேரை சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவது மருத்துவ விஞ்ஞானம் தானே?

ஜோதிடத்தின் பெரிய குறைபாடே அதன் நிச்சயமற்ற விடைகள் தான். ஒரே ஜாதகத்தைப பாத்து  மூன்று ஜோதிடர்கள் மூன்று விதமான பலன்கள் சொல்ல அதிக வாய்ப்பு உண்டு. இது எதனால் ஏற்படுகிறது?

பல ஜோதிடர்கள்  வெவ்வேறு ஜோதிட நூல்களைப் படித்து ஜோதிடர்கள் ஆகிறார்கள். புலிப்பாணியின் ஜோதிட முறை  வேறு. போகரின் ஜோதிடம் வேறு. அகஸ்தியரின் முறைகளும் வித்தியாசப்படும்.மேலும் இன்று அரைகுறையாக ஜோதிடம் கற்றுக் கொண்டு ஜோதிடர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். மேலும் பஞ்சாங்கமே பல உள்ளன. ஒரு பஞ்சாங்கத்தின் படி  ஒருவருக்கு கடக லக்கினமும், வேறொரு பஞ்சாங்கம் படி சிம்ம லக்கினமும் வர வாய்ப்புகள் உண்டு. லக்கினம் மாறி விட்டால் எல்லா பலன்களும் மாறி விடும்.

நமது பண்டைய முனிவர்கள் தமது ஞான திருஷ்டியால் வான                                   சாஸ்திரத்திலும் ஜோதிடத்திலும் பல அரிதான உண்மைகளைக் கண் டு பிடித்தனர். அவர்கள் காலத்தில் ஜோதிடம்  விஞ்ஞானமாக இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பெரும்பாலான விஷயங்கள்  எல்லாம் அழிந்து போய்  விட்டன என்றே சொல்ல வேண்டும்.

இந்திய ஜோதிடம் குப்பை அல்ல. அரசாங்கம் இத்துறையில் பெரிய அளவில் ஆராய்ச்சி மேற்கொண்டால் இந்தக் கலை நிச்சயம்  விஞ்ஞானமாக மாறும். அப்படி மாறினால் பல விஷயங்களை நாம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். அதனால் எத்தனையோ விரயங்களைத்  தடுக்கலாம். எத்தனையோ நல்ல விஷயங்களை நடக்க வைக்கலாம்.

ஜோதிடம்  விஞ்ஞானமாக மாறினால் அது மிகவும் நல்லது. ஏன் அரசாங்கம் இந்த துறையைக்  கண்டு கொள்வதில்ல என்பது எனக்குப்  புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி ஜோதிடம்  விஞ்ஞானம் அல்ல. அது ஒரு கலையே. ஆனால் ஜோதிடம் நிச்சயம்  விஞ்ஞானமாக மாற முடியும் என்பதே அடியேனின்  நம்பிக்கை.

வாழ்க வளமுடன்!

             வாஸ்து சாஸ்திரம் வேலை செய்யுமா?

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 

Post a Comment

 
Top