May 29, 2025 09:02:23 PM Menu
 

ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர் மிகவும் முக்கியம் ஆகும். பெயர் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. பெயர் நல்ல நேர் மறையான அதிர்வுகளை (Positive vibrations) ஏற்படுத்தினால் நலம் தரும். பெயர் சொல்லும் போது இனிமையாகவும், நல்ல எண்ணங்களை உச்சரிப்பவரின் மனதில் ஏற்படுத்துமாறும் இருக்க வேண்டும்.


புரியாத பெயர்கள் ஒருவருக்கு இருந்தால் அது அவருக்கு நற் பயன் தராது. மாறாக அவர் ஒரு குழப்பவாதியாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு நல்ல அல்லது தீய அதிர்வுகள் உண்டு. சிலர் தமது ஆண்  குழந்தைகளுக்கு பெண் பெயர்களை  சூட்டி விடுகின்றனர். அவர் கள் வளர, வளர பெண் தன்மை பெற்று விடுவதை நாம் கண் கூடாக காணலாம்.

நாம் நம் குழந்தைகளுக்குப்  பெயர் வைக்கும் போது சற்று ஆராய்ச்சி செய்து பொருத்தமான நல்ல அதிர்வுகளைக் கொண்ட பெயரை வைப்பது மிகவும் நல்ல பலன்களை அவர்களுக்குக்  கொடுக்கும்.

உங்கள் பெயர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அனேகம் பேர் தங்கள் பெயரில் முழு திருப்தி இல்லாமல் தான் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் ஏனோ  தங்கள் பெயரை மாற்ற விரும்புவதில்லை.

ஒரு சில பெயர்கள் மிகவும் மோசமான அதிர்வுகளைக் கொடுக்கலாம். சில பெயர்கள் அந்த பெயருக்குரியவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகின்றன என்பதும் உண்மை தான். உதாரணமாக ஒரு மென் பொருள் பொறியாளருக்கு  (Software Engineer) குப்பன் என்றோ அல்லது  முனியாண்டி என்றோ மாயாண்டி என்றோ பெயர் இருந்தால் பிறர் கூப்பிடும் போது சற்று நெளியத்தானே செய்வார்கள்? பொதுவாகவே ஆண்களுக்கு  தங்கம், தங்கமணி, தேன்மொழி போன்ற பெண் பெயர்கள் இருந்தால் அவர்களும் தர்ம சங்கடத்தில் ஆழ்வார்கள். அத்தகையவர்கள் நிச்சயம் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

நம்மில் பலருக்கு தம் பெயர் பிடிப்பதில்லை. என்றாலும் நாம் நம் பெயரை மாற்ற விரும்பாமல் சகித்துக் கொண்டு வாழப்  பழகிக்  கொள்கிறோம். பெயர் நம் வாழ்க்கையை ஓரளவுக்கு பாதிக்கும் என்றே நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

இனி பிறக்கும் குழந்தைகளுக்காவது நல்ல பெயர்களை சூட்டுவோம்.

வாழ்க வளமுடன்!

         உங்கள் பிறப்பு எண்ணை கண்டு பிடிப்பது எப்படி?

உங்கள் விதி எண்ணை  கண்டு பிடிப்பது எப்படி?
29 Nov 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top