நம்மை பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தான் நாம் மேலும் முன்னேற முடியும் என்பது தான் நவீன சுய முன்னேற்ற குருக்கள் ஆணித்தரமாக கூறும் சித்தாந்தம் ஆகும். பெரு நிறுவனங்கள் (Corporate Companies) ஒன்றோடொன்று ஒப்பிட்டு கொண்டு தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. நம்மை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் நம் உண்மையான திறமைகள் நமக்குத் தெரிய வரும். நம்மை நாம் மேலும் வளர்த்துக் கொள்ள அது பெரிதும் உதவும் என்பதே இன்றைய சுய முன்னேற்ற நிபுணர்களின் கருத்தாகும்.
ஒப்பிடுதல் உண்மையில் முன்னேற்றத்திற்குத் தேவையா?
நீங்கள் உங்களை மற்றொருவருடன் ஒப்பிடும் போது உங்களுள் பதற்றம் ஏற்படுகிறது. பதற்றம் இருக்கும் வரை உங்களால் உங்களின் முழுத் திறமையை வெளிக் கொணர முடியாது. மேலும் நீங்கள் உங்களின் தன்னம்பிக்கையை இழக்கவும் கூடும்.
ஒப்பிடுதல் கூடாதா? நீங்கள் உங்களை மற்றவரோடு ஒப்பிடுதல் கூடவே கூடாது. ஆனால் நீங்கள் உங்களை உங்களோடு ஒப்பிட்டுக் கொள்ளளலாம். அது எப்படி என்று நீங்கள் வினவலாம். உங்களின் திறமை சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இப்பொழுது அதிகரித்திருக்கிறதா என்று ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். அதில் தவறில்லை. அது உங்கள் திறமையை மேலும் வளர்க்க உதவும் என்பது உண்மையே.
நீங்கள் உங்களை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது தவறு.அது உங்கள் முன்னேற்றத்திற்கு என்றுமே உதவாது. ஆனால் பெரு நிறுவனங்களுக்கு இது பொருந்துமா என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஏன் என்றால் பெரு நிறுவனங்கள் இன்று லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.
வாழ்க வளமுடன்!
எதிர் பாராததை எதிர் பாருங்கள்
ஆசைப் படுவது தவறா?

Post a Comment