நல்லவர்கள் இந்த உலகில் ஏன் பலவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்? கெட்டவர்கள் எப்படி வெற்றிகரமாகவும், சந்தோஷமாகவும் வாழ்கிறார்கள்? இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சற்று கடினம் தான். இவற்றைப் பார்க்கும் போது கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் நமக்குள் எழத்தான் செய்கிறது அல்லவா? கடவுள் நல்லவரா? நல்லவர் என்றால் ஏன் இவற்றை அனுமதிக்கிறார்?  ஒரு வேளை கடவுளுக்கு இவற்றைக்  கட்டுபடுத்தும் சக்தி இல்லையோ? மேலே படியுங்கள் ........


நல்லவர் ஒருவர் துன்பப் படுகின்றார் என்றால் அவர் எத்தனைக் காலம் கஷ்டப்படுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். சில சமயங்களில் நமக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் பல நன்மைகள் பிறகு நடப்பதும் உண்டு. ஒரு நல்லவனுக்கு ஒரு முறை ஒரு அரசன் கை விரல் துண்டிக்குமாறு தண்டனை விதித்து விட்டாராம். எல்லோரும் வருத்தப்பட்டார்கள். சில ஆண்டுகள் கழித்து அந்த கை விரல் இழந்தவர் காட்டிற்கு சென்ற போது காட்டுவாசிகளால் சிறை பிடிக்கப்பட்டார். காட்டுவாசிகள் அவரை கடவுளுக்கு பலி கொடுக்க ஆயத்தம் செய்த பொது ஒரு விரல் இல்லாததை அறிந்து பலி கொடுக்காமல் விடுதலை செய்தனர். ஆக அவரது துன்பமே பிற் காலத்தில் அவரது உயிரைக் காக்கும் வரமாக அமைந்தது.

ஆக, கடவுள் ஒரு நல்லவனுக்கு துன்பத்தை அளிக்கிறார் என்றால் அது பிற்  காலத்தில் நன்மையாக முடியவும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? தாய் தன் குழந்தையை குளிப்பாட்டும்போது பார்ப்பதற்கு கொடுமை படுத்துவது போல் தோற்றமளிக்கும். ஆனால் அது அந்த குழந்தையின் நன்மைக்குத்தான் என்பது அறிவு முதிர்ச்சியடைந்தவர்களுக்குப் புரியும்.

'பிறக்கும் குழந்தை குருடனாக பிறப்பதேன்' என்று நீங்கள் வினவலாம். அது எந்த பாவத்தையும் செய்ய வில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். நம் உடலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் தோன்றுகின்றன.  7 வருடங்களில் உடலிலுள்ள எல்லா செல்களும் அழிந்து புது செல்கள் உருவாகியிருக்கும். ஆனால் நம் உடல் அப்படியெ தானே இருக்கிறது? அது போல் நம் ஆன்மா பல உடல்களை களைந்து புதிய உடல்களை பல ஜென்மங்களில் எடுக்கிறது..உண்மையில் 'நாம்' என்பது நம் ஆன்மா தான். ஆகையால் நாம் செய்யும் பாவங்கள் மற்றும் புண்ணியங்கள்  நம் ஜென்மங்களில் தொடரும்.

நாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் நன்மை மற்றும் தீமைகள் முந்தைய ஜென்மங்களின் பலன்களே. ஒரு சிலர் மிகுந்த அதிர்ஷ்டங்களுடன் இந்த ஜென்மத்தில் வாழ்வதற்கும், ஒரு சிலர் மிகுந்த துரதிர்ஷ்டத்துடன் வாழ்வதற்கும் இதுவே காரணம் ஆகும்.

கெட்டவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கும் நல்லவர்கள் நாசமாய் போவதற்கும் காரணம் இப்பொழுது புரிகிறதல்லவா?

வாழ்க  வளமுடன்!

பக்தியும்  பகவத் கீதையும் வயதானவர்களுக்கு மட்டும் தானா?

                           கோபம் ஏன் வருகிறது?

Post a Comment

 
Top