'நீங்கள் மன நிறைவான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்கிறீர்களா?' இந்தக் கேள்வியை நீங்கள் யாரிடம் கேட்டாலும் அவர்கள் இல்லை என்று தான் அநேகமாக பதில் கூறுவார்கள். பணக்காரர்களும், புகழுடன் வாழ்பவர்களும் கூட மன நிறைவின்றியே வாழ்கின்றனர் என்பது தான் கொடுமையான உண்மை.


மன நிறைவு ஏன் யாருக்கும் வருவதில்லை? எல்லோரும், பணமும், புகழும் மன நிறைவைத் தரும் என்று நம்பி அவைகளைத் துரத்துகின்றனர். அவை கிடைத்த பின் அவர்கள் மனம் அதிக பணத்திற்கும், அதிக புகழுக்கும் ஆசைப் படும் என்பது தான் நிஜம். பணக்காரர்கள் பணத்தை பாதுகாப்பதற்காகவும், தக்க வைத்துக்கொள்வதற்காகவும் படாதபாடு படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.

அன்பான குடும்பம், ஆரோக்யமான உடல்,  நெருங்கிய நண்பர்கள், பாசமான உறவினர்கள் இவை யாவும் உங்களுக்கு மன நிறைவைத் தரலாம். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடுக்கும் பணமும் உங்களுக்கு சந்தோஷத்தைத் தரலாம். ஆனால், இந்த சந்தோஷம் உண்மையும் அல்ல. நிரந்தரமும் அல்ல.

உங்கலுள் உள்ள இறைவனை அறிந்தால் அது உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும். அந்த இறை ஷக்தியுடன் தொடர்பு ஏற்படும் போது கிடைக்கும் இன்பம் உண்மையானது. நிரந்தரமானது. அது தான் முழுமையான மன நிறைவைத் தரும் என்பதே என் நம்பிக்கை ஆகும்.

நீங்கள் மன நிறைவான, சந்தோஷமான வாழ்க்கை உண்மையில் வாழ்கிறீர்களா?

                  அடங்கா மனமே அடங்கு

             முக்கோண வெற்றி சூத்திரம்

Post a Comment

 
Top