பால் குடிப்பது குழந்தைகளுக்கு நல்லது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் பெரியவர்கள் பால் குடிக்கலாமா? கூடாதா? மேலே படியுங்கள்.........


சில சமயங்களில் விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிகள் நமக்கு குழப்பத்தையே தருகின்றன. பெரிய வியாபார  நிறுவனங்கள் பணத்தை  இறைத்து உண்மையை பொய்யாக்குவதும், பொய்யை உண்மையாக்குவதும் இன்று நிகழ்வதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 

பால் குடிப்பது நல்லது என்று ஒரு சாராரும், அதனால் நல்லதும் நடப்பதில்லை, கெடுதலும் இல்லை என்று ஒரு சாராரும், பால் குடித்தால் உடலுக்கு கெடுதல் என்று ஒரு பிரிவினரும் சொல்லுகின்றனர். சாதாரண  மனிதன் எதை நம்புவான் பாவம்? சட்டையை கிழித்துக் கொண்டு தெருவில் ஓடும் மன நிலைமையில் தானே இருப்பான்?

பாலில் கால்சியம், புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைய உள்ளன. ஆதலால் உடம்புக்கு மிகவும் நல்லது என்று சிலர் சொல்லுகிறார்கள்.

பால் கன்றுக் குட்டிக்காகப்   படைக்கப்பட்டது. மனிதனுக்கு அதை சாப்பிடுவதால் எந்தப்  பயனும் இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். மேலும் இன்று பசுவின் பாலிலும் இரசாயனம் கலந்து விட்டது. இன்று விவசாய நிலங்கள் மற்றும்  அவற்றில்  விளையும்  யாவும் இரசாயன பாதிப்பால் இயற்ககைத் தன்மையை இழந்து நிற்கின்றன. அப்படி இருக்கும் பொழுது பசுவின் பாலும் தீமை பயக்கக் கூடியதே என்று சிலர் சொல்லுகிறார்கள்.

பால் பல நன்மைகளைத் தருகின்றன என்றே நினைக்கின்றேன். பால், எலும்பு பலம் பெற உதவுகிறது. பற்கள் நலம் பெறவும் உதவுகிறது. மேலும், வாய் சுகாதாரத்திற்கும், சக்தி தரவும் பெரிதும் உதவுகிறது. இரவில் ஒரு  டம்ளர் பால் குடித்து விட்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.

முடிவாக நான் சொல்லுவது என்ன வென்றால் இயற்கையான பால் பலருக்கும் நன்மை பயக்கும் அளவோடு பருகினால். சிலருக்குப்  பால்  வயிற்றுக்  கோளாறுகளை கொடுக்ககூடும். நீங்கள் பயன்படுத்திப் பார்த்து முடிவுக்கு வாருங்கள்.

ஆமாம், காபி குடிப்பது நல்லதா? கெட்டதா? டீ குடிப்பது நல்லதா? கெட்டதா? மற்றும்  ஒரு வலைப் பதிவில் அவைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வாழ்க வளமுடன்!

           மாதுளம்பழத்தின் மகிமைகள் 

                      புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?

Post a Comment

 
Top