சீசரின் மனைவி வேண்டுமானால் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக   இருக்கலாம். ஆனால் நாம் எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே. அன்னை தெரசாவைக் கூட இந்த உலகம் கண்டிப்பாக விமர்சித்திற்கும். அப்படி இருக்கும்போது நீங்களும் நானும் விமர்சனத்திலிருந்து தப்புவது எங்கனம்?
உங்களை ஒருவர் அல்லது பலர் விமர்சிக்கும்போது நிச்சயம் மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். அத்தகையான விமர்சனங்களை சமாளிப்பது எப்படி? மேலே படியுங்கள்........



உங்களை ஒருவர் அல்லது பலர் விமர்சிக்கின்றார்கள் என்றால் ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் ஏதோ உருப்படியான காரியம் செய்திருக்கிறீர்கள் என்பது தான் அது . ஒன்றும் செய்யாமல் வீட்டில் சும்மா இருக்கும் சோம்பேறிகளை இந்த உலகம் விமர்சிக்கப்போவதில்லை. இயேசுவையும், கௌதம புத்தரையும், சீதையையும் விமர்சனம் செய்த உலகம் நம்மை விமர்சனம் செய்தால் ஏன் கவலைப்பட வேண்டும்? மேலும் காய்த்த மரம் தானே கல்லடிப்படும்?

ஒருவர் உங்களை விமர்சனம் செய்தால் அவர் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராயுங்கள். நாம் செய்யும் தவறு நம் கண்ணுக்கு சில சமயங்களில் தெரிவதில்லை. மற்றவர் எடுத்து சொல்லும்போது நம் தவறுகள் நம் கண்ணுக்குப்  புலப்படக்கூடும். உங்கள் மீது தவறு இருந்தால் ஒப்புக்கொள்ளுங்கள். தவறை திருத்திக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் நம் கௌரவம் ஒன்றும் குறைந்து விடாது.

ஒரு சிலர் உங்கள்  வளர்ச்சிக் கண்டு பொறாமையினால் உங்களை விமர்சித்திருப்பார்கள். அதை நீங்கள் புறக்கணியுங்கள். அத்தகையான விமர்சனங்களுக்காக நீங்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை. சொல்லப் போனால் அத்தகையான விமர்சனங்களுக்காக நீங்கள் சந்தோஷப்படலாம்.

ஒரு சிலர் உங்கள் மீது உள்ள அக்கறையினால் கூட உங்களை தவறாக விமர்சித்திருக்கலாம். அப்பொழுது நீங்கள் அவர்களுக்கு அவர்கள் தவறைப்  புரிய வைக்கலாம்.

ஆக விமர்சனங்களுக்காக நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை. கோபப்படவேண்டியதில்லை. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு தலை வணங்குங்கள். அழிவுப்பூர்வமான அல்லது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் என்றால் அவைகளை அப்படியே புறக்கணியுங்கள். அது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் சாத்தியமற்றது அன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்!

                     எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

                          எதிர்பாராததை எதிர்பாருங்கள் 

Post a Comment

 
Top