நாம் வாழ்க்கையில் எடுக்கும் முக்கிய முடிவுகளில் ஒன்று நம் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது தான். அதை மட்டும் நாம் சரியாக செய்து விட்டால் வாழ்க்கை எளிதாகி விடும். அதில் தவறு நேர்ந்து விட்டால் வாழ்க்கைத்  தோல்வியில் முடியலாம்.



உங்கள் வாழ்க்கைத் துணையை எப்படி தேர்தெடுப்பது? நிறைய விஷயங்கள் இதில் கவனிக்க வேண்டியிருக்கிறது. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? உடல் தோற்றத்திற்கா? அல்லது பணத்திற்கா? அல்லது அறிவிற்கா? அல்லது ஒழுக்கத்திற்கா?

நல்ல அழகான, அறிவான, ஒழுக்கமான, பணக்கார வாழ்க்கைத் துணை கிடைப்பதாக இருந்தால் யார் வேண்டாம் என்பார்கள்? ஆனால் எல்லாம் கிடைப்பது அரிதல்லவா? ஆகையால் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பார்ப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். உதாரணமாக, சிலர் பணத்திற்கும் சிலர் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம்          அல்லவா?

என்னைப் பொறுத்த மட்டில் நான் நல்ல குணங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிப்பேன். ஒழுக்கமும் மிகவும் முக்கியம் எனக்கு. சுமாரான உடல் அழகு இருந்தால் போதும். உள்ள அழகு அதை விட முக்கியம் எனக்கு. உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக  இருக்க வேண்டும். பிறகு தான் பண வசதி, சமுக அந்தஸ்து போன்றவை எல்லாம். நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தால் போனஸ் மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

நான் எப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் முன்னுரிமைக் கொடுப்பேன் என்பதை இந்த பட்டியலில் காணலாம்.

1. நல்ல குணங்கள் 

2.  ஒழுக்கம் 

3. மன ஆரோக்கியம் 

4. உடல் ஆரோக்கியம் 

5. அறிவு 

6. உடல் அழகு 

7. பணம் 

8. சமுக அந்தஸ்து 

9. நகைச்சுவை உணர்வு 

10. அதே மதம் 

உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? எந்தெந்த  விஷயங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பீர்கள்?

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்குப் 
பொருத்தமானவர் தானா?

              உங்கள் பணப்பிரச்சினைக்குத் தீர்வு 


Post a Comment

 
Top