ஒரு சில மனிதர்கள் நம்மை மிகவும் கவர்ந்திருப்பார்கள். அவர்களது சிறந்த பண்புகள் அல்லது அவர்களது அசாதாரணமான திறமைகள் நம்மை அவர்கள் பால் ஈர்த்திருக்கும். அவர்களில் ஒரு சிலர்  நமக்கு வாழ்க்கையில் முன்னேற உத்வேகம் கூட அளித்திருப்பார்கள். அவர்களது வாழ்க்கை உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற ஊக்கமளித்திற்கும். அப்படி  நீங்கள் வியந்து கொண்டாடும் மனிதர்கள் யார் யார்?


நான் வியந்து கொண்டாடும் மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். எல்லோரையும் இங்கு குறிப்பிட்டால் இடம் நிச்சயம் பத்தாது. ஆகவே குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைக் கவர்ந்தவர்களில் எனது நண்பர்கள், சொந்தக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்களும் அடங்குவர்.


எனது தந்தை தான் நான் மிகவும் வியந்து கொண்டாடிய முதல் மனிதர். பிறகு என்னை அதிகம் பாதித்தவர்கள் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, கர்ம வீரர் காமராஜர், பெரியார் போன்றோர் ஆவார்கள். நான் ஒரு தீவிரமான ஆத்திகவாதியாக இருந்தாலும்  பெரியார் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.


தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், மேரி கியூரி, ஐசக் நியூட்டன் போன்ற விஞ்ஞானிகள் இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை சுகங்களுக்காக எத்தனைக் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப்  பார்க்கிறேன்.

சச்சின் டெண்டுல்கர், ப்ஜோர்ன் போர்க், ரோஜர் பெடரர், மரடோனா , ரொனால்டோ, முஹம்மத் அலி, கார்ல் லூயிஸ், பீலே போன்ற விளையாட்டு வீர்கள் என்னை மிகவும் பாதித்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இசைத்துறையில், மைக்கேல் ஜாக்சன், ஷக்கீரா, பிரிட்டினி  ஸ்பியர்ஸ், ஜெனிஃபர் லோபஸ், கிஷோர்  குமார், ஆர்.டி. பர்மன், ஆஷா போஸ்லே, ஹரிஹரன், இளைய ராஜா, எஸ்.ஜானகி போன்றோர் என்னை சொர்க்கத்திற்கே அழைத்து சென்றிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.   

புருஸ்லீ, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், மாதுரி தீட்சித் போன்ற நடிகர்களும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல  வேண்டும்.

சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் யார் யார்?








              ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் 


                 உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

Post a Comment

 
Top