ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பார்கள். நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் எனது முன்னுரிமை பட்டியலில் இல்லாமல் போகலாம். அதே போல் எனது முன்னுரிமைகள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம்  இல்லாத விஷயங்களாக  இருக்கலாம்.



பொதுவாக எல்லோரும் தங்கள் ஆரோக்கியத்திற்கும் தங்களது குடும்பத்தினர் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்கு அடுத்து ஆண்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இன்று பெண்களும் பணம் சம்பாதிப்பதிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

அடுத்து நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அதாவது நல்ல வாழ்க்கைத்துணை அமைந்து சந்தோசமான குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்றே எல்லோரும் விரும்புவார்கள். சொந்த வீடு கட்ட வேண்டும், ஒரு நல்ல கார், மற்றும் வங்கியில் ஒரு பெருத்த தொகை இருப்பு இருக்க வேண்டும் என்றும் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

ஒரு சிலர் இவைகளையெல்லாம் தாண்டி புகழ் பெறவும் விரும்புகின்றனர். ஆக, பொதுவாக மக்கள் எல்லோரும் வாழ்க்கையில் முன்னுரிமைக் கொடுக்கும் விஷயங்கள் உடல் ஆரோக்கியம், பணம், அன்பான குடும்பம் மற்றும் புகழ் தான்.

மக்கள் ஏன் மேற்கூறியவற்றிற்கு முக்கியத்துவம்  அளிக்கிறார்கள்? நல்ல ஆரோக்கியம், பணம், சொத்து, குடும்பம், மற்றும் புகழ் அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புவது தான் காரணம்.

உண்மையில் நம் சந்தோஷத்திற்கு இந்த வெளிக் காரணிகள் எல்லாம்  தேவையேயில்லை என்பது தான் நிஜம். உங்கள் மனம் பக்குவப்பட்டு இருந்தால் உங்கள் சந்தோசத்தை நீங்களே தீர்மானிக்கலாம். அதாவது எந்த சூழ்நிலையிலும் நீங்கள் சந்தோசமாக வாழ முடியும்.

அந்த மனப் பக்குவம் இல்லாதவர்கள் இருப்பதை வைத்தாவது சந்தோசமாக வாழக்கற்றுக் கொள்ளவேண்டும்.

வாழ்க வளமுடன்!

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?

                      விமர்சனங்களை சமாளிப்பது எப்படி?

Post a Comment

 
Top