மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பர். கணவன் அமைவதும் அப்படியே.             வாழ்க்கைத் துணை மட்டும் ஒருவருக்கு சரியாக அமைந்து விட்டால் மற்ற நல்ல விஷயங்கள் எல்லாம் தானாகவே நடக்கும் எனலாம். வாழ்க்கை நிச்சயம் பேரின்பமாகும்.



உங்கள் வாழ்க்கைத்  துணை எந்த அளவுக்கு உங்களுக்குப்  பொருந்தக்கூடியவர் என்பதை எண்  கணிதப் படி பார்ப்போம். அதைக் கண்டுபிடிக்க உங்களுடைய பிறப்பு எண்ணும் உங்கள் துணைவரின் பிறப்பு எண்ணும் தேவை.

பிறப்பு எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி? 

உங்கள் பிறந்த தேதி 06/07/1987 என்றால் நீங்கள் பிறந்த நாளை மட்டும் கணக்கில் எடுங்கள். அதாவது 6 ஐ மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும். உங்கள் பிறப்பு  எண் 6 ஆகும். உங்கள் பிறந்த தேதி இரட்டைப் படை  எண்ணில் வந்தால்? உங்கள் பிறந்த தேதி 29/07/1984 என்றால், 29 ஐ முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒற்றைப்படை எண் வரும் வரை கூட்டி எளிமைப் படுத்த வேண்டும். 2+9=11, மேலும் எளிமைப் படுத்த, 1+1=2 . ஆக, உங்கள் பிறப்பு எண் 2 ஆகும்.

வாழ்க்கைத் துணைப் பொருத்தம்:

பிறப்பு எண் 1: பிறப்பு எண்  4 உள்ளவர்கள் அருமையாகப் பொருந்துவார்கள். அடுத்தபடி 8, 2, 5,3, 6 பிறப்பு எண் உள்ளவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.  சுமாரான  பொருத்தம் உடைய எண்கள்  1, 7. 9.   

பிறப்பு எண் 2: சிறந்த பொருத்தம் என்றால் அது 7 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 2, 6, 3, 5, 4, 8. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 3: சிறந்த பொருத்தம் என்றால் அது 9, 3,  பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 2, 5, 1,4, 8. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 4: சிறந்த பொருத்தம் என்றால் அது 1, 4, 8 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 2,7,5. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 5: சிறந்த பொருத்தம் என்றால் அது 1, 5  7, 8 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 4,6. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 6: சிறந்த பொருத்தம் என்றால் அது 9, 6, 2 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 4,5,8. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 7: சிறந்த பொருத்தம் என்றால் அது 2, 6, 4 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 1,9. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 8: சிறந்த பொருத்தம் என்றால் அது 1, 4 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 2,5, 8, 9. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

பிறப்பு எண் 9: சிறந்த பொருத்தம் என்றால் அது 3, 6 பிறப்பு எண் உடையவர்களே. அடுத்தபடி பொருந்தக் கூடியவர்கள் 1,4,5, 8, 9. மற்றவை சுமார் பொருத்தம் தான்.

எச்சரிக்கை: நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தேடுக்கும் போது இதை ஒரு அளவுக்கு வழி காட்டும் குறிப்பாக பயன் படுத்திக் கொள்ளுங்கள். மற்றப்படி சரியான ஜோடியை தேர்தெடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. இதை மட்டுமே வைத்து தேர்ந்தெடுப்பது என்பது சரியாகாது.

ஏற்கனேவே கல்யாணமானவர்கள் அல்லது  காதலித்துக் கொண்டு இருப்பவர்கள் சும்மா ஒரு ஜாலிக்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்!

 உங்கள் விதி எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி?


            கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 



Post a Comment

 
Top