இவ்வுலகில் பிறந்த எல்லோருமே மகிழ்ச்சியாய் வாழவே விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். மற்றவர் எல்லாம் சோகத்துடனோ அல்லது தற்காலிகமான மகிழ்ச்சியுடன் தான் வாழ்கிறார்கள். மகிழ்ச்சியாய் வாழும் இரகசியங்கள் தான் என்ன? மேலே படியுங்கள்.......


மகிழ்ச்சியாக வாழ நல்ல உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் முதலில் உங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லோரிடமும் அன்பாக இருங்கள். அன்பில்லாதவன் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. அன்பில்லாத ஒருவன் மது மற்றும்  மாது மூலம் சுகம் பெற முடியாதா  என்று நீங்கள் கேட்கலாம். அந்த சுகம் தற்காலிகமானதாகத் தான் இருக்கும். மீண்டும் அடுத்த நாள் மதுவும் வேறொரு மங்கையும் இருந்தால் தான் அவன் கவலையை, குற்ற உணர்ச்சியை மறக்க இயலும். இது என்ன பிழைப்பு? குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் ஒருவன் உண்மையான சந்தோசம் எப்படி அனுபவிக்க இயலும்?

உங்களுக்குப் பிடித்த படிப்பை படியுங்கள். பிடித்த வேலையை செய்யுங்கள். கடினமாக உழையுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்றால் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும். தேவைக்கு அதிகமாக உள்ள  செல்வத்தை இல்லாதவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

தோட்டத்தில் உள்ள ஒரு மரம் இனிமையான கனிகளைக் கொடுக்கிறது. இதமான நிழலையும் கொடுக்கிறது. பாலைவனத்தில் உள்ள மரம் யாருக்கும் பயன் படாது. அது போல் தான் கருமியிடம் உள்ள செல்வமும். அன்பில்லாதவன்  வாழ்க்கையும்  பாலவனத்தில் உள்ள மரம் போல் தான். உண்மையான மகிழ்ச்சி அதில் இருக்க முடியாது.

மற்றவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் செய்த தவறுகளை மன்னியுங்கள். விரோதங்களை மனதில் வளர்க்காதீர்கள்.

எளிமையான, அன்பான வாழ்க்கை வாழுங்கள். யோகா மற்றும் தியானம் தினமும் செய்யுங்கள். இறைவனோடு தொடர்பு கொள்ளும்போது உண்மையான பேரின்பம் கிடைக்கும். அது தான் நிலையான் சந்தோசம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன?

வாழ்க வளமுடன்!

                 ஏன் இந்த போலித்தனமான வாழ்க்கை?

                     எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

Post a Comment

 
Top