ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக மட்டுமின்றி உள்ள ரீதியாகவும் வித்தியாசப்படுவதால் அவர்களின் சிந்தனை வேறுபடவே செய்கிறது.ஆண்  செவ்வாய் கிரகத்திலிருந்து வந்ததாகவும் பெண் வீனஸ் கிரகத்திலிருந்து வந்ததாகவும் சொல்லுவார்கள். இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் கூட  செவ்வாய்  ஆண்  கிரகம் என்றும் வீனஸ் பெண் கிரகம் என்றும்சொல்லியிருக்கிறார்கள். வேறு வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் வேறு பட்டுத் தானே இருப்பார்கள்?



பொதுவாக ஆணின் சிந்தனை எல்லாம் தொழில், பணம் சம்பாதிப்பது, புகழ் அடைவது போன்ற விஷயங்களிலேயே சுழன்று வரும். ஆண் தொலைக்காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பான். பிரச்சினைகளை யாரிடமும் சொல்ல மாட்டான். தானே அவைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்வான்.

பெண் பொதுவாக கணவன், குழந்தைகள், குடும்பம் இவற்றிற்கு முக்கியத்துவம்  அளிக்கின்றாள். தொலைக்காட்சியில் அவள் பார்க்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் குடும்பம்  சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். பிரச்சினைகள் வந்தால் உடனடியாக நெருங்கியவர்களிடம் பகிர்ந்து கொள்வாள். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட பகிர்ந்து கொள்ளுவதிலேயே அதிக ஆர்வம்  காட்டுவாள்.

பெண்ணுக்கு பேசுவதில் ஆர்வம்  அதிகம். அவளால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச்  செய்ய முடியும். பெண் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவள். பெண் தன குழந்தைகளுக்காக எத்தகைய தியாகமும் செய்யத் துணிவாள். பெண் அன்பானவள். எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாதென்பதால் கடவுள் தாயைப் படைத்தார் என்பார்கள்.

பெண் சிறிய விஷயங்களைப்  பெரிதாகவும் பெரிய விஷயங்களை எளிதாகவும் எடுத்துக் கொள்வதாகவும்  ஆண்கள் நினைக்கின்றனர். பெண் புதிரானவள். பெண் மனதை அறிந்தவர் எவரும் இல்லை என்றும் கூட கூறுவார்கள். பெண் வெளிப்படையாக பேசாமல் தன மனதில் உள்ளதை தன்  துணைவன் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். இறுதியில் ஏமாற்றம் தான்  மிஞ்சுகிறது. ஆணும் மாறுவதில்லை. பெண்ணும் மாறுவதே இல்லை.

ஒருப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது பெண் அதை உணர்வுபூர்வமாக அணுகுவாள் என்றும், ஆண் அதையே அறிவுப் பூர்வமாக அணுகுவான் என்றும் சொல்லுகிறார்கள்.

ஆணும் பெண்ணும் பல விஷயங்களில் மாறுபடுவதால் ஒருவருக்கொருவர் நிறைவு செய்துக் கொள்ள முடிகிறது என்றே நினைக்கின்றேன்.

வேறுபாட்டில் ஒற்றுமை காணும் உறவு ஆண்  பெண் உறவு என்றே சொல்லலாம். கடவுளின் படைப்புத்திறனை என்னவென்று வியப்பது?

வாழ்க வளமுடன்!

கற்பழிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறதா?

உயிருக்குயிராய் நேசித்தவரை வெறுப்பது எப்படி?



Post a Comment

 
Top