மனித மனம் அற்புத சக்தி வாய்ந்தது. அபரிதமான ஆற்றல் உடையது. மனதை சரியாகப் பயன் படுத்தினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆனால் மனதைத்  தவறாக பயன் படுத்தினால் தோல்விகளையும், துயரங்களையும் தான் சந்திக்க நேரிடும். 


மனம் என்றால் என்ன? பலர் மனதை ஒரு உறுப்பு என்றே நினைக்கின்றனர். சிலர் இதயத்தை மனம் என்று நினைக்கின்றனர். வேறு சிலர் மூளையை மனம் என்று நினைக்கின்றனர்.உண்மையில் மனம் இதயமும் அல்ல. மூளையும் அல்ல.

அப்படி என்றால் மனம் என்றால் என்ன? எண்ணங்களின் ஓட்டம் தான் மனம். நம் மனதில் சதா காலமும் எதாவது சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது. நம் எண்ணங்கள் நல்லவையாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம். நம் மனதில் பெரும்பாலும் நல்ல எண்ணங்கள் ஓடினால் நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவோம். பெரும்பாலும் தீய எண்ணங்கள் ஓடினால் நம் வாழ்வில் தோல்விகளும் துயரங்களும் தான்     
மிஞ்சும்.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக மாறிப் போவாய். உங்கள் எண்ணங்கள் தான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. அதனால் தான் நம் வீட்டில் பெரியவர்கள் எப்பொழுதும் நல்லவற்றையே எண்ணவும் நல்ல  வார்த்தைகளையே பயன்படுத்தவும் 
அறிவுறுத்துவார்கள்.

நாம் எப்பொழுதும் நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும். நம் மனம் என்பது அறுவை சிகிச்சை நிபுணரின் கத்திப்  போன்றது. அக்கத்தியைக் கொண்டு ஒரு உயிரைக் காப்பாற்றலாம். ஒருவரைக்  கொல்லவும் பயன் படுத்தலாம்.

மனம் ஒரு குரங்கு என்றும் சொல்வர். அது கட்டுப்பாடு இன்றி செயல்படுவதால் அவ்விதம் கூறுவார். மனம்  நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம். மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் சோம்பேறித்தனமும், கெட்ட பழக்க வழக்கங்களும் வந்து சேரும். முடிவில் தோல்விகளும் , துயரங்களும் தான் மிஞ்சும்.

நல்ல எண்ணங்களை  எண்ணுங்கள். மனதை உங்கள் வசப்படுத்துங்கள். இந்த வையகமே உங்கள் வசப்படும். நீங்கள் சாதனையாளர்களாக வலம் வருவீர்கள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்வீர்கள்.

உங்கள் மனம் உங்களின் உற்ற நண்பனா? மிகக் கெட்ட எதிரியா?

வாழ்க வளமுடன்!

              விதி வலியது தானா?

                  உங்கள் பணப்பிரச்சினைக்குத்  தீர்வு 

Post a Comment

 
Top