பேசும் திறமை என்று நான் இங்கு குறிப்பிடுவது மேடைப் பேச்சை அல்ல. நாம் அன்றாட வாழ்க்கையில் பலரிடம் பல விஷயங்களைப்  பேச வேண்டியிருக்கும். சிலரிடம் நாம் சில காரியங்களை சாதிக்கவேண்டியிருக்கலாம். 
அவர்களிடம் தவறாக பேசினால் அல்லது சரியாக பேசாவிட்டால் நாம் நினைத்த காரியத்தை அவர்களிடம் சாதிக்க முடியாது.





பேசுவது சாதரணமாக விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அது ஒரு அரிய கலை. ஒரு சிலர் தான் இந்தக்கலையில் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள்.

பேசும் திறமையினால் ஒரு நல்ல வேலையைப்  பெற முடியும். வேலையில் பதவி உயர்வும்  பெற முடியும். விரும்பும் காதலனை அல்லது காதலியை அடைய முடியும். நிறைய நண்பர்களை சம்பாதிக்க முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிக்க பேசும் திறமை பெரிதும் உதவுகின்றது.

எதைப்  பேச வேண்டும், எப்படி பேச வேண்டும்  என்பதை தெரிந்து வைத்திருப்பது 
மட்டும் பேசும் திறமை அல்ல. எதை பேசக் கூடாது என்பதை அறிந்து பேசுவதும் ஒரு முக்கியமான பேசும் திறமை என்று தான் சொல்ல வேண்டும்.

பேசும் திறமை இல்லாததால் எத்தனையோ நல்ல விஷயங்களை மக்கள் வாழ்க்கையில் இழக்கிறார்கள்.

முகத்தில் ஒரு சின்ன புன்னகையுடன் பேசினால் எத்ததனையோ காரியங்களை சாதிக்கலாம். புன்னகை புரிய ஒரு பைசாக் கூட செலவு செய்ய வேண்டியதில்லை. இருந்தாலும் எத்தனை பேர் புன்னகையுடன் பேசுகின்றனர்?

எல்லாக் கலைகளையும்  போல் பேசும் கலையையும் நாம் முயற்சியினால் வளர்த்துக் கொள்ளலாம். பேசும் கலையை நாம் அலட்சியப்படுத்தக்கூடது என்பது எனது தாழ்மையான கருத்து. 

உயிருக்குயிராய் காதலித்தவரை வெறுப்பது எப்படி?

                                  விதி வலியது தானா?

Post a Comment

 
Top