இந்தியக் கலாச்சாரம் மிகவும் பழமையானது.. திருமணம் என்பது நம் இந்திய கலாச்சாரத்தில் புனிதமான விஷயமாக கருதப்படுகிறது. சேர்ந்து வாழும் முறை இப்பொழுது இந்தியாவிலும் பரவலாக வந்து விட்டது. இந்த  மேற்கத்திய கலாச்சாரம் சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் தான் அதிக அளவில் காணப்படுகிறது.





சேர்ந்து வாழ்வது தவறா? எதையும் தவறு அல்லது சரி என்று சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது? ஒருவருக்கு சரி என்று படுவது இன்னொருவருக்கு அபத்தமாக படலாம். ஒரு விஷயம் சட்டப்படி சரியா இல்லையா என்று வேண்டுமாளால் சொல்லலாம்.

வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. ஆனால் திருமணத்தினால் கிடைக்கும்  உரிமைகள் அவர்கள் பெற முடியாது. அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை சட்டம் வாரிசுகளாக ஏற்காது. ஆனால் நீங்கள் அவர்களுக்கு உங்கள் சொத்தை எழுதிவைக்கலாம். இன்சூரன்ஸ், ஜீவனாம்சம் போன்ற உரிமைகளும் எளிதில் பெற முடியாது.

மற்றப்படி ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் எந்தப்  பிரச்சினையும் இருப்பதாக எனக்குத்  தெரியவில்லை.  ஆண்  பெண் உறவு என்பது மிகவும் புனிதமானது. தனக்குப்  பிடித்தவரோடு  சேர்ந்து வாழும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

திருமணம் என்பது ஒரு வாழ்வில்  ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கக் கூடிய நிகழ்வு ஆகும். அது ஒரு பெரிய பொறுப்பும் கூட. சிலர் பொறுப்பு ஏற்க பயந்து திருமணம் செய்வதில்லை. சிலர் எப்பொழுது வேண்டுமானாலும் கழன்று  கொள்ள வசதியாக திருமணம் செய்ய மறுப்பார்கள்.

மேற்சொன்ன காரணங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் முக்கிய காரணங்கள் இருந்தால் சேர்ந்து வாழ்வதில் தப்பில்லை.

அதாவது தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாம் என்பது என் கருத்து.

வாழ்க வளமுடன்!


              உயிராய் காதலித்தவரை வெறுப்பது எப்படி?

                 இந்தியாவில் அதிகரித்து வரும் விவாக ரத்து 

Post a Comment

  1. Once I wrote an article like this. Here is the link
    .http://exillife.blogspot.de/2013/05/blog-post_10.html

    ReplyDelete

 
Top