இந்தியப்பொருளாதாரம் உயர்கிறதோ இல்லையோ, விவாக ரத்து மட்டும் ராக்கெட் போல் உயர்ந்துகொண்டே போகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் கல்யாணம் என்பது வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கக் கூடிய நிகழ்வாக இருந்தக் காலம் போய் விட்டது. தொட்டதெற்கெல்லாம் விவாக ரத்து என்ற நிலை இங்கேயும் என்று வந்துவிட்டது.




விவாகரத்து இந்தியாவில் அதிகரிப்பது எதனால்?
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். பெண்கள் அதிக அளவில் இன்று வேலைக்கு போகிறார்கள். சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் அவர்கள் ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இல்லை. அதனால் அவர்கள் இல்லறத்தில் பெரிய  பிரச்சனைகள்  வரும் போது விவாக ரத்துக்கு தயாராகிவிடுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள். பெண்கள் சம்பாதிப்பது என்பது நல்ல விஷயம் தான் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆண்களுக்கு பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் விவாக ரத்துக்கள் அதிகமாகிறது  என்பது மட்டும் நிஜம்.

சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் நிகழ்ச்சிகள் இன்றைய இந்த நிலைமைக்கு ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.

அமெரிக்கக் கலாச்சாரம் இங்கே பெரிய அளவில் ஊடுருவ்வுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பெண்கள் அதிக அளவில் இன்று படிப்பதும், உலக விஷயங்கள் பற்றி அறிந்து இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

பெண்கள் தங்கள் உரிமை பற்றி விளிப்புணர்வு பெற்று இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்போது சில கெட்ட விஷயங்களும் நடக்கத்தான் செய்யும். 

விவாக ரத்து அதிகரிப்பது தவறு என்று சொல்ல முடியாது. அது காலத்தின் கட்டாயம்.

ஆனால் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் யாதெனில், அற்ப விஷயங்களுக்காக விவாகரத்து வரை செல்லக்கூடாது என்பது தான். விவாக ரத்து என்பது கணவன் மற்றும் மனைவி மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. அவர்கள் பிள்ளைகளை அது பெரிதும் பாதிக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடா து.

ஆறுதலான விஷயம் என்ன வென்றால், என்ன தான் இந்தியாவில் விவாக ரத்து அதிகமாகி விட்டாலும் இன்றும் உலக அளவில் பார்க்கும் போது நம் விவாக ரத்து எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவில் கல்யாணம் பண்ணாமல் சேர்ந்து வாழுவது தான்  அதிகம் என்கிறார்கள். கல்யாணம் பண்ணும் அந்த கொஞ்ச பேரில் சுமார் 52 சதவிகிதம் பேர் விவாகரத்து பெறுகின்றனர். இந்தியாவில் எல்லோரும் கல்யாணம் பண்ணிக்கொண்டு தான் வாழ்கிறோம்.இருப்பினும் நம்மில் வெறும் 1 சதவிகிதத்தினர் தான்  விவாகரத்து கோருகின்றனர்.

உலகில் மிக குறைந்த அளவில் விவாக ரத்து பெறுவதில் நாம் இரண்டாம் இடத்தில் உள்ளோம். அயிரிஷ் மக்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.

திருமணத்தை மதிப்போம்.பெண்களை மதிப்போம். விவாகரத்தை தவிர்ப்போம். வாழ்க இந்தியக்  கலாச்சாரம்!

                                     இந்தியா ஏழை  நாடா?

.

Post a Comment

 
Top