இன்று எங்கு பார்த்தாலும் 'யோகா' மயமாகி வருகிறது. என்று அமெரிக்கர்கள் யோகாவில் ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தார்களோ அன்றே நம் இந்தியர்களுக்கும் அதில் நம்பிக்கை வர ஆரம்பித்து விட்டது.அதுவும் ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி ஆராய்ச்சி செய்து யோகாவின் நன்மைகளை பட்டியலிட்டபின் இந்தியர்கள் சும்மா இருப்பார்களா  என்ன? அமெரிக்கர்களுக்கு கோடானு கோடி நன்றி.




 சரி, யோகா  பண்ணுவதால்அப்படி என்ன தான் பயன்? 

  • யோகா உடலை வலிமைப்படுத்துகிறது.

  • யோகா மனதை வலிமைப்படுத்துகிறது.

  • யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

  • மன இறுக்கத்தைக்  குறைக்கிறது.

  • மனதை ஒருமைப்படுத்தும் சக்தியை அதிகரிக்கிறது.

  • நாளமில்லா சுரப்பிகள் சரிவர சுரக்க உதவுகிறது.

  • உடலின் நெகிழ்வுத் தன்மையை (flexibility) அதிகரிக்க உதவுகிறது.

  • இர த்த ஓட்டத்தை சீராக்குகிறது.
இன்னும் எத்தனையோ மன நலன்களும் உடல் நலன்களும் யோகாவினால் உண்டாகிறது.




தியானம் யோகாவின் ஒரு பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா தினமும் செய்யுங்கள். பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன்!




Post a Comment

 
Top