மனிதன் இறப்பற்றவனா? நீங்கள் இறப்பற்றவரா? தெரிந்து கொள்ளலாம், மேலே படியுங்கள்.

மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, தனக்கு மரணமே வராது என்பது போல் நடந்து கொள்கிறான்.எத்தனையோ சாவுகளைப் பார்த்தாலும், தான் ஏதோ மரணத்தை வென்றவன் போல் நடந்து கொள்கிறான்.





உங்களுக்கு நிறைய இறப்புகளைப் பார்த்தாலும் நாமும் ஒரு நாள் மரணிப்போம் என்று ஏன் தோன்றுவதில்லை? நாம் ஏதோ சாகா வரம் பெற்றவர் போல் ஏன் நடந்து கொள்கிறோம்?

நமது உடலிலுள்ள உயிருக்கு (ஆன்மாவிற்கு)  மரணம் என்பதே கிடையாது. மரணம் சம்பவிப்பது இந்த உடலுக்குத் தான். உடல் தான் அழியக்கூடியது. ஆன்மா அழிவற்றது. நமது சட்டை மிகவும் பழையதாகி விட்டால், புதிய சட்டை வாங்கி விடுகிறோம். அதே போல் தான் இந்த ஆன்மாவும் உடல் கெட்டு விட்டால் வேறு உடல் தேடி சேர்ந்து விடுகிறது.

ஆன்மாவுக்கு என்றுமே அழிவில்லை என்பதால் நாம் மரணத்திற்கு பயப்பட வேண்டியதில்லை. நாம் இதே உலகில் மீண்டும், மீண்டும் பிறக்கத்தான் போகிறோம். பின் எதற்கு சாவிற்குப் பயப்பட வேண்டும்?

நம் ஆன்மா பலப் பிறவிகளைக்கடந்து, முதிர்ச்சியடைந்து இறுதியில் இறைவனை அடைவதையே முக்தி அடைதல் என்கிறோம்.

நீங்கள் என்பது உங்கள் உடல் அல்ல. நாம் நம் உடலைத் தான் நாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அது தவறு. நம் ஆன்மா  தான் உண்மையில் நாம்.

உங்கள் ஆன்மாவிற்கு இறப்பு என்பதே இல்லை. ஆகையால் உங்களுக்கு மரணம் என்பதே இல்லை.

ஆமாம், மரணத்தை வென்றவர் தான் நீங்கள்.

இந்தப் பிறவியில் மட்டுமில்லை. எந்தப் பிறவியிலும் உங்களுக்கு மரணமே இல்லை.

வாழ்க வளமுடன்!

                விதி வலியது தானா?

                             மஹாபாரதத்தின் மகிமை 

Post a Comment

 
Top