அன்பிற்கு இணையான  ஒன்று  இவ்வுலகில் இல்லை. அன்பே சிவம் என்பர். அன்பு தான் இவ்வுலகை சுழல செய்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அன்பில் பல வகை உண்டு. 

தாயன்பு, தந்தையின் அன்பு, சகோதர சகோதிரிகளின் அன்பு, உறவினர்களின் அன்பு, நண்பர்களின் அன்பு, காதலன் அல்லது காதலியின் அன்பு, கணவன் அல்லது மனைவியின் அன்பு என்று பல வகையான அன்பு நம்மை மகிழ்ச்சியாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.    





எல்லாவிதமான அன்பும் சுயநலமானதாகவே இருக்கிறது. ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால்,  உயிருக்குயிராய் காதலிப்பவர்களும் சுயலமாகவே அன்பு செலுத்துகிறார்கள் என்பது தான்.

பணமோ, அழகோ குறைந்து விட்டால் காதல் காணாமல் போவதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?

வேலை போய் விட்டால் காதல் போய் விடுகிறது. சொத்து போய் விட்டால் காதல் போய் விடுகிறது. அழகு போய் விட்டால் காதல் போய் விடுகிறது. பதவி போய் விட்டால் காதல் போய் விடுகிறது. அரசனைப் பார்த்தால்  புருஷனைக் கைவிடுகிறார்கள். பணக்காரப் பெண்ணைப்  பார்த்து விட்டால் காதலிக்கும் பெண்ணுக்கு டாட்டா காண்பித்து விடுகிறார்கள்.

செல்வமும், செல்வாக்கும்  போய் விட்டால் நட்புகளும், உறவுகளும், காதல்களும் காணாமல் போய் விடுகின்றன என்பது தான் நிஜம்.

இந்த அவசர உலகில் இன்னும் ஒரே ஒரு அன்பு தான் தன்னலமற்றதாக இருக்கிறது. அது தான் தாயன்பு. தாயின் அன்பு மட்டும் தான் கலப்படமில்லாத, சுயநலமில்லாத, நிபந்தனையற்ற அன்பாக விளங்குகிறது. நீங்கள் பிச்சைக்காரனாக இருந்தாலும், கோடீஸ்வரனாக இருந்தாலும், தாயின் 'அன்பு ஊற்று' மட்டும்  வற்றவே வற்றாது. நீங்கள் விபத்தில் காலை இழந்து விட்டாலும், ஊரே உங்களை ஒதுக்கி வைத்து விட்டாலும் தாயின் அன்பு மட்டும் மாறவே மாறாது. 





கடவுள், தான் .எல்லா இடத்திலும் இருக்க முடியாதென்பதால் தாயைப் படைத்தான் என்பர். என்ன உண்மையான வார்த்தைகள்? உங்களால்  கோவிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால், உங்கள்  தாயை கும்பிட்டு வாருங்கள், அதே பலன்கள் உங்களுக்கு உறுதியாய் கிட்டும்.

தாயன்பிற்கு நிகரான ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை. அதற்கு அடுத்தபடியான தன்னலமற்ற அன்பு என்றால் தந்தையின் அன்பை சொல்லலாம்.

தாய்மார்கள் வாழ்க! தாயன்பு வாழ்க! வாழ்க வளமுடன்!

                மனதின் அற்புத சக்திகள் 

                            யோகாவின் பலன்கள் 

Post a Comment

 
Top