பழங்களில்  மாதுளம் பழத்திற்கு என்று தனி சிறப்புகள் பல உண்டு. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக மாதுளம் பழம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இன்று இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் அதிகமாக விளைவிக்கப் படுகிறது. 




மாதுளம் பழத்தின் மகிமைகள் தான் என்ன? 

1. மாதுளம் பழம் சில வகையான இருதய நோய்களை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த உதவுகிறது.

2. இரத்தஅழுத்தத்தைக்  குறைக்க உதவுகிறது.

3. கெட்ட கொலஸ்டரால்(LDL) குறைய உதவுகிறது.

4. மாதுளம் பழத்தில் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் (Anti- oxidants) அதிகம் இருப்பதால் புற்று நோயை தடுக்கவும் , குணப்படுத்தவும் பயன்படுகிறது.

5. 50 வயதுக்கு மேல் ஆண்களுக்கு பிராஸ்ட்டேட் (Prostate) சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு என்பதால் அவர்கள் மாதுளம் பழத்தை தினமும் எடுத்து கொள்ளலாம்.

6. மாதுளம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

7. இரத்த சோகை உள்ளவர்கள், இரத்த விருத்திக்கு மாதுளம் பழம் எடுத்துக் கொள்ளலாம்.

8. மாதுளம் பழத்தை தர்பூசணியுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மைக் குறைவுக்கு 'வயகரா'வாக செயல் படுகிறது.

9. அரிதிரிடிஸ் நோய் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது.

10. ஆயுர் வேதத்தில் பேதி, இரத்த பேதி போன்ற நோய்களைக் குணமாக்க இப்பழத்தை உபயோகிக்கிறார்கள்.

11. இதை பயன்படுத்துபவர்களுக்கு சக்கரை நோய் வரும் வாய்ப்புக்  குறைவு.

12. சுவாச நோய்களுக்கும்  இது நல்ல மருந்தாகும்.

13. மின்னலடிக்கும் தோல் பொலிவைப்  பெற இதை தினமும் உண்ணுங்கள்.

14. இப்பழத்தில், வைட்டமின் A, C, E மற்றும் ஃபோலிக்   ஆசிட் அதிக அளவில் உள்ளது.

15. நல்ல பசியைத்  தூண்ட மாதுளம் பழம் உண்ணுங்கள்.

16. பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி உள்ளது.

17. பல் சுகாதாரத்திற்கும் நல்லது.

தினம் ஒரு மாதுளம் பழம் உண்ணுங்கள். வாழ்க வளமுடன்!

               யோகாவின் பயன்கள் 

                எபோலா எமன் 

Post a Comment

 
Top