சில சின்ன விஷயங்கள், எளிதான விஷயங்கள் நம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். ஆனால் நாம் அவற்றைக்  கடை பிடிக்காததால் பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் பெற இயலாமல் வாழ்கிறோம். 




புன்னகை: நாம் புன்னகைக்க ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்ல. ஆனால் புன்னகையினால் ஏற்படும் பலன்களோ ஏராளம். நம்மில் எத்தனை பேர் புன்னகையை அணிந்து வலம் வருகிறோம்?

உற்சாகம்: ஒரு சிலர் எப்பொழுதும் உற்சாகத்துடுன் இருப்பார். அவர்களுக்கு எல்லோரும் எளிதில் உதவுவர்.

உடல் தோற்றம்: ஒரு சிலர் உடலை சுத்தமாக வைத்திருப்பர். உடைகள் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். அவர்களை எல்லோரும் விரும்புவர் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

இங்கிதம்: சிலர் பொது இடங்களில் மிகவும் இங்கிதமாகவும், பண்பாகவும் நடந்து கொள்வர். அதனால் மற்றவர்கள்   அவர்களை மிகவும்  நேசிப்பர்.  அவர்களுக்கு எந்த உதவியையும் செய்வார்கள்.

கனிவாக பேசுவது: பேசுவது என்பது ஒரு அரிய கலை. சிலர் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். இனிக்க இனிக்கவும், நகைச்சுவையுடனும் பேசுபவர்கள் எல்லோராலும்  விரும்பப்படுவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நன்றி சொல்தல்: நன்றி சொல்லுவது ஒரு எளிதான செயல். அனால் அதைக் கூட நிறையப் பேர் செய்வதில்லை என்பது தான் கொடுமை.

மன்னிப்பு வேண்டுதல்: தவறு செய்வது என்பது மனித இயற்கை. கடவுளேக் கூட தவறு செய்யாமல் இருக்க முடியாது இந்த கலியுகத்தில். நீங்களும், நானும் எம்மாத்திரம்? தவறு செய்வது தவறில்லை. செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேளாமல் இருப்பது தான் தவறாகும்.

ஆக மேற் சொன்ன விஷயங்கள் எல்லாமே சின்ன விஷயங்கள் தான். ஆனால் அவை உங்களுக்கு மிக பெரிய அளவில் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் என்பது நிஜம்.

முயற்சி செய்துப்  பார்க்கலாமே? வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top