எல்லோருக்கும் நாம் மரியாதை தர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் நாம் சமுதாயத்தில் சிலருக்கு அதிக மரியாதை அளிக்கிறோம் என்பதையும்  மறுக்க முடியாது. ஒரு சிலரை நாம் மதிப்பதே இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை தானே?




பொதுவாக நாம் பணம் இருப்பவரை இயல்பாக மதிக்க ஆரம்பித்து விடுகிறோம். பெரிய பதவியில் இருப்பவரை நாம் ரொம்பவே மதிப்போம்.புகழ் உள்ளவரையும் நாம் மதிக்கின்றோம். ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், இளைய ராஜா, பாடகி ஜானகி போன்றோரையும் மிகவும் மதிக்கின்றோம்.

நல்ல மனிதர்களை நாம் மதிக்கின்றோமா?

முன்பெல்லாம் பெரியவர்களை நாம் நன்கு மதித்து வந்தோம். பண்டைய காலங்களில் ஆன்மிகவாதிகளை மக்கள் மிகவும் மதித்திருக்கிறார்கள். தசரதன் போன்ற பேரரசர்கள் கூட விசுவாமித்திரர், வசிஷ்டர் போன்ற மாமுனிவர்களை சிரம் தாழ்த்தி வணங்கியிருக்கிறார்கள். வேத வியாசர் குரு வமிச மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.

ஆன்மிகவாதிகள் தன்னை உணர்ந்தவர்கள். கடவுளை அறித்தவர்கள். இந்த பிரபஞ்சத்தையே காப்பவர்கள். ஆகையால் அதிக அளவில் மதிக்க ப்படவேண்டியவர்கள் ஆன்மிகவாதிகளே. இன்று ஆசிரமங்களில் காவி அணிந்து பாவிகளாய்  வாழும் போலிச் சாமியார்களை ஆன்மிகவாதிகள் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். . 

பணிவுடையவர்களை, பிறருக்காக வாழ்பவர்களை, பெரியவர்களை மதிப்பவர்களை நாமும் மதிக்கலாம். 

தீய வழிகளில் பணம் சம்பாதித்தவன் என்று தெரிந்தும் பணக்காரனை கூச்சமே இல்லாமல் நாம் மதிப்பது கேவலமான செயல் அல்லவா?

அன்பானவர்களை, பண்பானவர்களை, நல்லவர்களை மதிப்போம். பணக்காரன் நல்லவனாயின் அவனையும் மதிப்போம்..

நல்லவர்களை மதித்து வாழ்வோம்..

                                ஜோதிடம் உண்மையா 


Post a Comment

 
Top