எத்தனை முறை படித்தாலும் சற்றும் சலிக்காத மஹா காவியம் மஹாபாரதம் ஆகும்.தொலைக்காட்சியில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி மஹாபாரதம் தொடர் தான்.

அப்படி என்ன தான்  மகிமை இருக்கிறது இந்த மஹாபாரதத்தில்? 





மஹாபாரதத்தில் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் வருகின்றன. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவம் வாய்ந்து மறக்க முடியாவண்ணம் உள்ளது. ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள் இருந்தாலும் ஒரு இடத்தில் கூட பிசிறு அடிக்காது. காரணம் இது உண்மையில் நடந்த கதை.

வீரம், காதல், சோகம், சந்தோசம் என நவரசங்களும் அற்புதமாய் கலந்திருக்கும் கலவை தான் மஹாபாரதம்.

கிருஷ்ணரின் ராஜ தந்திரங்கள் கதைக்கு வலிமை சேர்க்கின்றன என்றால் மிகை ஆகாது.   5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த போரில் அணு ஆயுதங்கள் பயன் படுத்தியிருக்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

குருஷேத்திரத்தில் ஒரு மிகப்  பெரிய போர் நடந்ததற்கும், சுமார் ஒரு லட்சம் பேர் போரில் மடிந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. குருஷேத்திரம் இன்றைய ஹரியானா மாநிலத்தில் தலைநகரம் தில்லியிலிருந்து 
சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ளது.



மஹாபாரதம் ஓர் அற்புதம். இந்த உலகம் உள்ள வரையிலும் மஹாபாரதமும் நிலைத்து இருக்கும். 

வாழ்க மஹாபாரதம்! வளர்க அதன்  புகழ்!!

                 ஜோதிடம் ஏமாற்று வேலையா 

Post a Comment

 
Top