நீங்கள் ஒரு வேளை நியூமராலஜி என்கின்ற எண் கணிதம், அதிர்ஷ்ட எண் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தாலும், சும்மா ஒரு ஜாலிக்காகவது மேலே படித்தால் நிச்சயம் வருந்தமாட்டீர்கள்.



பிறந்த எண்: ஒரு சில எண் கணித நிபுணர்கள் பிறந்த எண்ணையே அதிர்ஷ்ட எண்ணாக சிபாரிசு செய்கின்றனர். பிறந்த எண் என்றால் என்ன? அதை எப்படி கண்டுப்பிடிப்பது? சற்று விரிவாக பார்ப்போம்.

பிறந்த எண்ணைக் கண்டுப்பிடிப்பது எப்படி? நீங்கள் பிறந்த தேதி 06-10-1976 என்றால், தேதியை மட்டும் கணக்கில் எடுக்கவும். இங்கே 6 வருகிறது. அதனால் உங்கள் பிறந்த எண் 6.  ஒரு வேளை உங்க பிறந்த தேதி 16-10-1976 ஆக இருந்தால், உங்கள் பிறந்த எண்ணைக் கண்டு பிடிக்க  எண் 1 யையும் எண் 6 யையும் கூட்ட வேண்டும்.

1+6=7. ஆக, உங்கள் பிறந்த எண் 7 ஆகும்.

விதி எண்: ஒரு சில எண் கணித நிபுணர்கள் விதி  எண்ணையே அதிர்ஷ்ட எண்ணாக சிபாரிசு செய்கின்றனர். விதி எண் என்றால் என்ன? அதை எப்படி கண்டுப்பிடிப்பது? சற்று விரிவாக பார்ப்போம்.

விதி  எண்ணைக் கண்டுப்பிடிப்பது எப்படி? நீங்கள் பிறந்த தேதி 06-10-1976 என்றால், எல்லா எண்களையும் ஒற்றை இலக்க எண் (Single digit number) வரும் வரை கூட்ட வேண்டும்.

0+6+1+0+1+9+7+6=30

3+0=3

உங்கள் விதி என் 3.

பெயர் எண்: ஒரு சில மேற்கத்திய எண் கணித நிபுணர்கள் பெயர் எண்ணையே அதிர்ஷ்ட எண்ணாக சிபாரிசு செய்கின்றனர். ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒரு எண்  உண்டு. உங்கள் பெயரில் வரும் எண்களை கூட்டி வரும் ஒற்றை இலக்க எண்ணையே பெயர் எண் என்பார்கள்.

அதிர்ஷ்ட கிரகத்தின் எண்: ஒரு சில ஜோதிடர்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் மிகவும் அதிர்ஷ்டமான கிரகமோ அந்த கிரகத்தின் எண்ணையே அதிர்ஷ்ட எண்ணாக சிபாரிசு செய்கின்றனர். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எண் உண்டு. உதாரணமாக உங்கள் ஜாதகத்தில் குரு மிகவும் அதிர்ஷ்டமான கிரகம் என்றால் உங்கள் அதிர்ஷ்ட எண் 3.

கிரகங்களின் எண்கள்: சூரியனின் எண் 1. சந்திரனின் எண் 2. செவ்வாயின் எண் 9. புதனின் எண் 5. குருவின் எண் 3. சுக்கிரனின் எண் 6. சனியின் எண் 8. ராகுவின் எண் 4. கேதுவின் எண் 7.

என்னைப்பொருத்த வரையில் விதி எண்ணையும், ஜாதக அதிர்ஷ்ட எண்ணையும் ஆராய்ந்து இரண்டில் ஒன்றை சிபாரிசு செய்வேன்.

உங்கள் அதிர்ஷ்ட எண்  என்ன? சொல்லுங்கள் பார்ப்போம்.

                ஜோதிடம் உண்மையா?

வாஸ்து சாஸ்திரம் வேலை செய்கிறதா?







19 Aug 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top