வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயங்களில் அவமதிப்பும் ஒன்று. நீங்கள் மந்திரியாகவோ, கோடீஸ்வரராகவோ, பிரபல நடிகராகவோ, விளையாட்டு வீரராகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சமயம் மற்றவரால்  அவமதிக்கப்பட்டிருப்பீர்கள். 






சொந்த கணவனோ அல்லது மனைவியோ கூட உங்களை அவமதித்திருக்கலாம். யார் அவமதித்திருந்தாலும் அதைத்  தாங்குவது கஷ்டம் தான். வாழ்க்கையில் பக்குவப்பட்ட மனிதர்களாலேயே அவமதிப்பை தாங்க முடிவதில்லை என்பதும்  நிஜம்.

அவமதிப்பைச் சமாளிப்பது எப்படி?

எதனால் நம்மை அவமதித்தார்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். நம்மிடம் பெரிய குறை இருந்ததால் அவமதித்தார்களா? அவர்களின் ஆணவத்தால் அவமதித்தார்களா?

நீங்கள் குடித்து விட்டு வேஷ்டி விலக தெருவில் விழுந்து கிடப்பவராயின், அவரை மட்டும் நிந்தித்து  என்ன பயன்? திருந்த வேண்டியது நீங்களும் தானே?

அவர்கள் ஆணவத்தால் உங்களை அவமதித்திருந்தால் குறை அவர்களிடம் தான். நீங்கள் கவலைப்பட என்ன இருக்கிறது?

அவமதிப்பு  எத்தனையோ பேரின் எழுச்சியைத் தூண்டி அவர்களை சாதனைகளைப் பண்ண வைத்திருக்கிறது. அவமதிப்புகளை அவர்கள் இலட்சியங்களாக மாற்றிக்கொண்டனர்.

வாழ்க்கையில் மிக உயர்ந்த சிகரங்களைத் தொட்டவர்களெல்லாம் கடுமையான அவமதிப்புகளைச் சந்தித்தவர்கள் தான்.

அவமதிப்புகளை எழுச்சியைத் தூண்டும் இலட்சியங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்கள் வசப்பட்டு விடும்.

வாழ்க வளமுடன்!

ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி டோய்  

             வாஸ்து சாஸ்திரம் உண்மையோ 

Post a Comment

 
Top