நாம் வாழ்க்கையில் தேவையில்லாத பல விஷயங்களுக்காக நிறையவேக்  கவலைப்படுகிறோம். சில விஷயங்கள் நம்மை மீறியவை. நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விஷயங்களுக்காக கவலைப்படுவதில் என்ன உபயோகம் இருக்கிறது.




நடந்து முடிந்த துக்ககரமான நிகழ்ச்சிகளைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. பழைய துக்கங்களை மறந்து விட்டு புது வாழ்க்கை வாழ்வதே புத்திசாலித்தனமாகும். அதே போல் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் அறுதியிட்டுக்  கூற இயலாது. வருங்காலத்திற்காக திட்டமிடலாம். ஆனால் வருங்காலத்தை  எண்ணி பயப்படுவதிலோ, கவலைப்படுவதிலோ எந்த பிரயோஜனமும் இல்லை.

நல்ல உணவுப்பழக்கங்களை பழகலாம். நல்ல உடற்பயிற்சிகளைச்  செய்யலாம்.அது நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால்  அதையும் மீறி நோய் வரக்கூடும். அதற்கு வருந்துவதை விட்டு விட்டு நோயைக்  குணப்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும்.

மின் வெட்டு தவிர்க்க முடியாததாக இருக்கலாம். அந்த நேரத்தில் வேறு உபயோகமான விஷயங்களை பண்ணலாமே. சாலையில்  வண்டி ஓட்டும் போது எத்தனையோ பேர் சாலை விதிகளை மீறி ஓட்டலாம். அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நீங்கள் கவனமாக ஓட்டலாம்.

மழையை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. மழையை நொந்து கொள்ளுவதற்குப்  பதிலாக குடையைப்  பிடிக்கலாமே!

 நீங்கள் என்ன தான் கவனமாக இருந்தாலும் சில சமயங்களில் விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். அது ஒரு விபத்தாக இருக்கலாம். அல்லது வியாபாரத்தில் அடையும் நஷ்டமாக இருக்கலாம்.

நீங்கள் உயிருக்குயிராக நேசிக்கும் ஒருவர் இறந்து போகலாம். அல்லது சில எதிர்பாராத காரணங்களால் உங்கள் காதலன் அல்லது காதலி உங்களைப் பிரியலாம்.

நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விஷயங்களை சரியாக செய்யுங்கள். நம்மை மீறிய விஷயங்களை எண்ணி கவலையுறாமல் பிரச்சனைகளுக்குத்  தீர்வைக் காணுங்கள்.

வாழ்க்கையை சரியாக வாழப் பழகி விட்டால் என்றென்றும் ஆனந்தமே. அனுதினமும் தீபாவளியே.

வாழ்க வளமுடன்!

அவமதிப்பைத் தாங்கிக் கொள்வது எப்படி?

         அதிர்ஷ்டம் என்பது உண்மையா?

Post a Comment

 
Top