இந்தியா ஒரு  'வளரும் நாடு' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சிலர் இது ஒரு ஏழை நாடு என்றும் சொல்கிறார்கள். சில விஷயங்களை பார்க்கும் போது  இந்தியா மிகவும் வளர்ந்துவிட்ட நாடோ என்று கூட எண் ணத் தோன்றுகிறது.




நமது இளைஞர்களும், இளைஞிகளும் 20, 25, 30 வயதுகளில் 20 ஆயிரம், 25 ஆயிரம், 50  ஆயிரம் என்று சர்வ சாதரணமாக சம்பளம் வாங்குகிறார்கள். 'பப்பு'களும், 'டிஸ்கொதே' கிளப்புகளும், 'பார்' களும்  புற்றிசல் போல் பெருகி  கொண்டே செல்கின்றன. 




முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் தர வரிசையில் 39 வது இடத்தில உள்ளார். போன வருடங்களில் அவர் 6 வது இடத்தில இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. 

கரீனா  கபூர் தனி விமானத்தில் விளம்பர படங்களில் நடிக்க பறக்கிறார். நடிகைகள் 'குத்து' பாட்டுக்கு டான்ஸ் ஆட தனி விமானங்களில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

ஒரு பக்கம் இன்னும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு   லாட்டரி அடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியா ஒரு  'வளரும் நாடா'?  வளர்ந்த நாடா? பணக்கார நாடா? பதில் தெரிந்தால் யாரவது சொல்லுங்களேன், உங்களுக்கு புண்ணியமாகட்டும்.  

Post a Comment

 
Top