எத்தனையோ நடிகர்கள் இந்தியாவில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால்  சூப்பர் ஸ்டார் என்றால் அது நம் தலைவர் ரஜினிகாந்த் ஒருவரே. ஆயிரமாயிரம் ஸ்டார்கள் இருக்கும் போது ஏன் ரஜினிகாந்த் மட்டும்  சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார்?




ஸ்டைல் நடிப்பு ஒரு காரணம்  என்பது உண்மை தான். ஆனால் அதை எல்லாம் தாண்டி அவரது எளிமை, பணிவு, உற்சாகம், ஆன்மிகம் மற்றும் அவரது மனித நேயம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. 

இன்று ஆசியாவிலேயே இரண் டாவது அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நம் சூப்பர் ஸ்டார் தான்.

ரஜினிகாந்த் ஒரு புண்ணிய ஆத்மா. ஒரு வயது குழந்தைக்கே ரஜினிகாந்த் பிடிக்கிறது என்றால் வேறு என்ன காரணம் இருக்க முடியும்? வயதானவர்கள், பெண்கள், மற்றும் எல்லா  மதத்தினருக்கும், எல்லா இனத்தவருக்கும் ரஜினிகாந்த் பிடிக்கிறது என்றால் அவருக்கு தெய்வீக அருள் அதிதமாய் இருக்கிறது என்று தானே பொருள்?

ரஜினிகாந்த் ஒரு சகாப்தம். ரஜினிகாந்த் ஒரு தெய்வீக  பிறவி. ரஜினிகாந்த் ஒரு புண்ணிய ஆத்மா.  ரஜினிகாந்த் ஒரு மனிதருள் மாணிக்கம்.







அவர் நினைத்து இருந்தால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராகவோ, ஏன் இந்தியாவின் பிரதமராக கூட ஆகி இருக்க முடியும். ஆனல் அவர் நாட்டை ஆள்வதை விட மக்களின் இதயங்களை ஆள்வதையே விரும்புகிறார்.

வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வளர்க அவரது புகழ்!!


Post a Comment

 
Top