April 27, 2025 08:22:56 AM Menu
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2016-கும்பம், மீனம் 



கும்பம்: குரு உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் பெயர்ச்சி ஆகி இருக்கின்றார். மேலும் அவர், உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 2ஆம் வீடு மற்றும் 4 ஆம் வீடுகளைப்  பார்க்கின்றார். இவ்வருடம் தொழில் மற்றும் உத்தியோகம் சிறு சிறு தடைகளுடன் நடக்கும். பணம் தேவைக்கு மட்டும் வந்து விடும். செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்லுமயோகம் அடைவார்கள். குடும்பம் மகிழ்ச்சிகரமாகவே விளங்கும். மாணவர்களாயின் படிப்பில் போதிய முன்னேற்றம் காண்பார்கள்.வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் சிறக்கும். தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நல்ல லாபங்களைத் தரும். 80% நன்மைகளை எதிர்பார்க்கலாம். 

மீனம்: மீன ராசிக்கு குரு 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். மேலும், குரு உங்கள் ராசியையும், 11ஆம், 3ஆம் வீடுகளையும் பார்க்கின்றார். திருமணமாகாதவர்கள் இவ்வருடம் திருமணம் செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி உறவு அற்புதமாக இருக்கும். கூட்டுத் தொழில் உயர்வைக் கொடுக்கும். நண்பர் வட்டாரங்களினால் லாபம் உண்டு. உங்கள் ஆரோக்கியம் மேம்படும். தைரியத்துடன் செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றியும், லாபமும் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகள் உறவு சிறப்பாக இருக்கும். பரஸ்பர நன்மைகள் ஏற்படும். 95% நன்மைகள் ஏற்படும் நேரமிது. ஆகையால் அதை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி 2016 பலன்கள் -மேஷம், ரிஷபம் 

குரு பெயர்ச்சி 2016 பலன்கள்- மிதுனம், கடகம் 

குரு பெயர்ச்சி 2016 பலன்கள்- சிம்மம், கன்னி 


2016 குரு பெயர்ச்சி பலன்கள்- துலாம், விருச்சிகம்  

2016 குரு பெயர்ச்சி பலன்கள்- தனுசு, மகரம்  

18 Aug 2016

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top