குரு பெயர்ச்சி பலன்கள் 2016- சிம்மம், கன்னி 

சிம்மம்: சிம்ம ராசிக்கு, குரு 2ஆம் வீட்டுக்கு செல்கின்றார். ராசிக்கு, 6ஆம், 8ஆம், மற்றும் 10ஆம் வீடுகளைப் பார்க்கின்றார். இந்த வருடம் குரு பகவான் உங்களுக்கு பணத்தை வாரி வழங்க உள்ளார். நன்றாக இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். பழைய கடன்களை அடைக்கமுடியும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நேரமிது. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். 90% நல்ல பலன்களை  எதிர்பார்க்கலாம்.



கன்னி: கன்னி ராசிக்கு, குரு ஜன்ம ராசியில் சஞ்சரிக்கின்றார். ராசிக்கு, 5ஆம், 7ஆம், மற்றும் 9ஆம் வீடுகளை பார்க்கின்றார். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு குரு பார்வையினால் மட்டுமே நல்ல பலன்கள்  நடக்கும் எனலாம். ராசியில் இருக்கும் குரு பகவான் அலைச்சலையும், சிறு சிறு அசௌகரியங்களையும்  கொடுப்பார். குழந்தைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் குழந்தைகளினால் நன்மைகள் பெறுவார்கள். குழந்தை பாக்கியத்தை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தால் இந்த வருடம் மழலைச்  செல்வம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு பிரமாதமாக இரும்மும். அன்னியோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் லாபம் ஈட்டுவர். நண்பர்கள் உதவியாய் இருப்பார்கள். தகப்பனார் உறவு சிறப்பாக இருக்கும். தந்தையின் உதவி கிடைக்கும். பூர்விக சொத்துக்களினால் பலன் உண்டு. ஆலய தரிசனங்கள் இந்த வருடம் கண்டிப்பாக உண்டு. 80% நல்ல பலன்கள்  எதிர்பார்க்கலாம்.

2016 குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம், ரிஷபம் 

2016 குரு பெயர்ச்சி பலன்கள் மிதுனம், கடகம் 

Post a Comment

 
Top