இன்று மக்கள் எல்லோரும் 'சொந்த வீடு' வேண்டும் என்பதில் மிகவும் முனைப்போடு இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். அது ஒரு அந்தஸ்து சின்னமாக ஆகி விட்டது எனலாம். தகவல் தொழில்நுட்பம் துறை இந்தியாவில் எழுச்சி பெற்ற பின் மக்களின் வாங்கும் திறன் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பது நிஜம். ஜாதகப்படி யார் யாரால் வீடு எளிதாக கட்ட முடியும்? ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். செவ்வாய் கிரகமும் வீடு கட்டும் யோகமும் பற்றி இந்த வலைப் பதிவில் காண்போம். மேலே படியுங்கள்......



யார் யார் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருக்கின்றாறோ அவர்கள் எல்லோரும் எளிதில் வீடு கட்டி விடுவார்கள். ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருக்கின்றார் என்று எப்படி தெரிந்து கொள்ளுவது?

1. செவ்வாய் ஆட்சி அல்லது உச்சமாக இருந்தால்.

2. நீச செவ்வாய் வக்கிரம் பெற்று இருந்தால். அல்லது நீசம் பங்கம் பெற்று இருந்தால்.

3. செவ்வாய் வர்கோத்தமம் பெற்று இருந்தால்.

4. செவ்வாய் நல்ல கிரகங்களின் நட்சத்திரம் ஏறி இருந்தால்.

5. யோக கிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தால்.

6. குரு ஜாதகரின் லக்கினத்திற்கு சுபராக இருந்து அவரது பார்வை பெற்றிருந்தால்.

7. மற்ற யோக கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால்.

8. செவ்வாய் ராகு சேர்க்கைப் பெறாமல் இருந்தால்.

9. மற்ற அவயோக கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை பெறாமலிருந்தால்.

10. செவ்வாய் அஸ்தங்கம் ஆகாமல் இருந்தால்.

11. செவ்வாய் லக்னத்திலிருந்து 3 அல்லது 6 அல்லது 10 அல்லது 11 ஆம்
வீட்டிலிருந்து அந்த வீடு நல்ல நட்பு வீடாக இருந்தால்.

12. லக்னாதிபதியும் நாலாம் வீட்டோனும் பரிவர்த்தனை பெற்றிருந்தால்.

மேலே சொன்ன எல்லா யோகங்களும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கவே முடியாது. இவற்றில் பாதி யோகங்கள் இருந்தாலே நல்ல வீடு அமையும் பாக்கியம் ஜாதகருக்கு நிச்சயம் ஏற்படும்.

 எண்  கணிதப்படி (Numerology) பார்த்தால் 9ஆம் எண் பிறப்பு எண்ணாகவோ அல்லது விதி எண்ணாகவோ உள்ளவர்களுக்கு வீடு கட்டும் யோகம் ஏற்படும்.
 பெயர் எண்  9 ஆக வந்தாலும் வீடு கட்டும் அதிர்ஷ்டம் அமையும் என்று சொல்லலாம்.

அது சரி, ஜாதகத்தில் வீடு கட்டும் யோகம் சுத்தமாக இல்லாவிட்டால் என்ன செய்வது? உதாரணமாக செவ்வாய் ஒருவர் ஜாதகத்தில் அஸ்தங்கம் ஆகி விட்டால்? செவ்வாய் கிரகத்திற்கு ப்ரீத்தி செய்யலாம். முருக பெருமானை வணங்கலாம். கந்த சஷ்டி கவசம் அனுதினமும் படிக்கலாம். செவ்வாய் உங்கள் லக்னத்திற்கு யோக கிரகமாக இருந்து ஜாதகத்தில் பலமிழந்து இருந்தால் பவளம் மோதிரம் அணியலாம். தினசரி தியானம் பண்ணும் போது சொந்த வீட்டில் வசிப்பது போல் கற்பனை செய்வது நல்ல பலனைத் தரும்.

எதுவுமே சரியாக வர வில்லை என்றால் மனைவி அல்லது கணவன் பெயரில் வீடு வாங்குங்கள். சரியாக வரும்.

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த வலைப் பதிவை ஜீரணிக்க முடியாமல் போகலாம். அவர்கள் கூட ஒரு ஜாலிக்காக இதைப் படிக்கலாமே?

வாழ்க வளமுடன்!

முக்கியமாக கடை பிடிக்க வேண்டிய 5 வாஸ்து விதிகள் 

15 எளிய வாஸ்து பரிகாரங்கள் 
02 Jul 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top