இன்று நாம் அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மை தான். மறுப்பதற்கில்லை. ஆனால் நாம், பலர் பல விஷயங்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லுவதை அன்றாடம் பார்க்கின்றோம். உதாரணமாக, உடற் பயிற்சி செய்ய நேரமில்லை என்பார்கள் சிலர். தியானம் செய்ய அவகாசம் இல்லை என்பார்கள் வேறு சிலர். சரியான உணவை சாப்பிட நேரம் இல்லை என்று சொல்லுபவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். உண்மையில் அவர்களுக்கு இந்த நல்ல விஷயங்களை செய்ய நேரமில்லையா?அல்லது நேரம் இல்லை என்பது கடைந்து எடுத்த ஒரு பெரிய பொய்யா? மேலே படியுங்கள்......


புத்தகம் படிக்க நேரம் இல்லை என்கின்றார்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நேரமில்லை என்கின்றார்கள். பொண்டாட்டி பிள்ளைகளிடம் பேச நேரமில்லை என்கின்றார்கள். இன்னொரு புறம், நாட்டின் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரிய கோடீஸ்வரர்கள் மணிக்கணக்கில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதையும் நாம் பார்க்கின்றோம்.

உண்மையில் நாம் ஒரு விஷயத்திற்கு நிஜமான முக்கியத்துவம் கொடுத்தால், அதற்கு நேரம் நிச்சயம் ஒதுக்கி விடுவோம் என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும். அதனால்தான் மிகவும் 'பிஸி'யாக இருக்கும் பிரபலங்கள் கூட 'காதல் கிசுகிசுக்களில்' மாட்டிக் கொண்டு முழிப்பதைப்  பார்க்கின்றோம். 'அந்த' விஷயத்திற்கு நேரம் இல்லாதவர்கள் யார் இருக்கின்றார்கள் இந்த உலகில்?

ஆக நேரமில்லை என்பது ஒரு வடி கட்டின பொய் என்றே சொல்ல வேண்டும். 'யோகா'  பண்ண நேரமில்லை என்று ஒருவர் சொல்லுகின்றார் என்றால் அவருக்கு அவர் உடல் மீது அவ்வளவு அக்கறை இல்லை என்று அர்த்தம். அல்லது அவர் ஒரு 'சோம்பேறி' யாக இருக்கலாம். அல்லது அவர் தன்னை மிகவும் 'பிஸி' ஆகக் காட்டிக் கொள்வதில் விருப்பம் உள்ளவர் என்று அர்த்தம். 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். உண்மையில் நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நிச்சயம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் என்பது தான் நிஜம். அப்படி முடிய வில்லை என்றால் உங்களுக்கு நேரத்தை எப்படி திறமையாக பயன் படுத்த வேண்டும் என்கின்ற 'யுக்தி' தெரிய வில்லை என்றே சொல்ல வேண்டும்.

முக்கியமான விஷயங்கள் எவை என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். அதற்கு நிச்சயம் நீங்கள் நேரத்தை ஒதுக்கியே ஆக வேண்டும். அது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை -முயன்றால் எளிதாக நேரத்தை சரியான முறையில் பயன் படுத்த பழகிக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்!

ரொம்ப நல்லவராக இருப்பது சரியா?

அவமானங்கள் வாழ்க்கையில் சகஜமப்பா 

Post a Comment

  1. உங்களுடைய இடுகை ஒன்றினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    ReplyDelete

 
Top