முகநூல் (Facebook) இன்று நம் வாழ்வின் அங்கமாகிப் போய் விட்டது என்பது நிஜம். முகநூல் நம் வாழ்வின் பல விஷயங்களில் இன்று பின்னி பிணைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். நம் நல்லது கெட்டதுகளில் முகநூல் சம்பந்தப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டியதிருக்கிறது. முகநூலினால் நமக்கு எத்தனையோ நன்மைகளும் சில தீமைகளும் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒரு சில காரணங்களுக்காக முகநூலில் உறுப்பினராக இருக்கின்றார்கள். முக நூலில் (Facebook) நீங்கள் ஏன் இருக்கின்றீர்கள்? மேலே படியுங்கள்....



முக நூலில் ஒருவர் இருக்க என்ன காரணம்?

1. பொதுவாக வயசு பையன்களும் பெண்களும் தான் முகநூலை அதிகம் பயன் படுத்துகின்றார்கள். அவர்கள் எதற்கு அதை பயன்படுத்துகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த வயதில் எதிரின ஆண் அல்லது பெண்ணோடு அறிமுகமாகி பழக பெரும்பாலும் பையன்களும் பெண்களும் முக நூலில் நேரத்தை செலவு செய்கின்றார்கள்.

2. சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையை அங்கு தேடுகின்றார்கள் என்றும் சொல்லலாம்.

3. சிலர் வெறும் காமத்திற்கு ஆள் தேடவும் பயன் படுத்துகின்றார்கள்.

4. சிலர் தங்களின் சொந்த விஷயங்களை உலகத்திற்கு தெரியப் படுத்த பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அப்படி செய்கின்றனர்.

5. சிலர் தங்கள் சொந்த கதை சோகக் கதைகளை கூட உலக நண்பர்களுடன் முக நூல் மூலமாக பகிர்ந்து கொள்ளுகின்றனர்.

6. சிலர் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள முக நூலைப் பயன்படுத்துகின்றனர்.

7. சிலர் தங்கள் தங்கள் வலைதளத்திற்கு ஆட்களை அனுப்ப பயன்படுத்துகின்றனர்.

8. இந்தியாவில் சில குடும்ப பெண்கள் 'எல்லோரும் இருக்கின்றார்களே' என்று அவர்களும் முகநூலில் இருக்கின்றார்கள். 

9. சிலர் ஊரை ஏமாற்றுவதற்காகவே இதில் இருக்கின்றனர்.

10. சிலர் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளுவதற்காக இதை பயன்படுத்துகின்றார்கள்.

11. சிலர் பொழுது போக்கிற்காக உபயோகப் படுத்துகின்றனர்.

12. சிலர் திருமணத்தில் திருப்தி இல்லாமல் வேறு துணை கிடைக்குமா என்று பார்க்கின்றனர்.

மொத்தத்தில் முக நூல் என்பது ஒரு டாக்டரின் கத்தி போன்றது. அதை வைத்து ஒரு உயிரையும் காப்பாற்றலாம். கொலையும் பண்ணலாம். நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே முகநூல் நல்லதா கெட்டதா என்று ஒருவருக்கு சொல்ல முடியும்.

நீங்கள் முக நூலில் ஏன் இருக்கின்றீர்கள்?

வாழ்க வளமுடன்! 

 பேஸ்புக் வரமா அல்லது சாபமா?

இணைய தளத்தில் தகவல்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதா?

Post a Comment

 
Top