மகேந்திரசிங் டோனி இந்திய அணிக்கு பலமா? பாதகமா? ஒரு காலத்தில் எல்லோராலும் வானளாவ புகழப்பட்ட மகேந்திரசிங் டோனி  இன்று எல்லோராலும் பந்தாடப் படுகின்றார் என்பது ஓரளவுக்கு நிஜம். ஏனிந்த நிலை டோனிக்கு? டோனி இன்றும் நல்ல திறமையுடன் விளையாடுகின்றாரா? அல்லது அவரது திறமை மங்கி விட்டாதா?  காப்டனாக அவரது செயல்பாடுகள்  சரியாக இருக்கின்றனவா? அல்லது அவரது தலைமையேற்கும் திறமைகள் குறைந்து விட்டனவா? மகேந்திரசிங் டோனி இந்திய அணிக்கு பலமா? பாதகமா? மேலே படியுங்கள்......



source: https://commons.wikimedia.org/wiki/File:MS_Dhoni.jpg


'மிஸ்டர் கூல்' என்று எல்லோராலும் புகழப்படும் டோனி இன்று பாட்டிங் பண்ணும் போது உள்ளுக்குள் நடுநடுங்கிக் கொண்டிருக்கின்றாரோ என்ற ஐயம் எனக்கு உள்ளது. அவர் பாட்டை தூக்கி அடிப்பது என்பது மிகவும் அரிதாகிப் போனது இன்று . அதை விட மோசம் என்னவென்றால் ஓவருக்கு 15 ரன் எடுக்க வேண்டிய நிலையிலும் பாதுகாப்பாக ஆடும் அவரது ஆட்டம். ஸ்கூல் பையன் கூட அப்படி நிச்சயம் ஆடவே மாட்டான். அடி அல்லது அவுட் ஆகி போ என்பது தான் ஒரு நாள் போட்டியின் தார்மீக விதி. தோற்று விட்டு வீட்டுக்கு விக்கெட்டை எடுத்து வந்து என்ன பயன்? ஏதோ ஒரு சில போட்டிகளில் கடைசி ஓவர்களில் அடித்து வெற்றியை தேடித் தந்தார் என்பதற்காக பல போட்டிகளில் 'டொக்கு' வைப்பது அழகல்ல.

அவரது காப்டன் திறமைகள் மோசமில்லை என்று சொல்லுவேன். ஆனால் தலைவன் நம்பிக்கை இல்லாமல் எதிர்மறையுடன் ஆடும் போது மற்றவர்களும் நம்பிக்கையை இழப்பார்கள் என்பது நிஜம். மேலும் அவர் நிறைய அரசியல் பண்ணுகிறார் என்கின்ற குற்ற சாட்டும் உள்ளது.

நான் ஒரு காலத்தில் டோனியின் தீவிர இரசிகனாகத் தான் இருந்தேன்.
 ஆனால் இப்பொழுதெல்லாம் அவர் அடித்து ஆட வேண்டிய நேரத்தில் பாட்டை தூக்காமல் ஹாக்கி ஆடுவதைப் பார்க்கும் போது அவர் மேல் இருந்த தீவிர ஈடுபாடு நிறைய குறைந்து விட்டது  என்றே சொல்ல வேண்டும்.

இன்றும் கூட அவரிடம் பாட்டிங் திறமை மிச்சம் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவருக்குத் தேவை தன்னம்பிக்கை தான். பாசிடிவாக  அவர் அடித்து ஆட ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் அணியிலிருந்து விலகுவது தான் அவருக்கு பெருமை சேர்க்கும்.

 மொத்தத்தில் அவர் அடித்து ஆட ஆரம்பித்தால் இந்திய அணிக்கு பெரும் பலமாக விளங்குவார் பல ஆண்டுகளுக்கு. அதை  விடுத்து மீண்டும் மீண்டும் அவர் ஹாக்கி ஆடிக் கொண்டிருந்தால் இந்திய அணிக்கு பெரும் பாதகமாக தான் இருப்பார் என்று சொல்லி முடிக்கின்றேன்.

வாழ்க இந்திய கிரிக்கெட்! வளர்க தோனி புகழ்! 





                                                            

Post a Comment

 
Top