எண்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. எண்கள் நம் வாழ்வில் பின்னிப் பினைந்து உள்ளன என்றால் அது மிகையாகாது. அது கணினி வேலை ஆனாலும் சரி, அல்லது கண்டக்டர் வேலை என்றாலும் சரி, எண்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த எண்கள் மனித வாழ்க்கையை பாதிக்கத்தான் செய்கிறது. சில எண்கள் உங்களுக்கு சாதகமாகவும் சில எண்கள் உங்களுக்கு பாதகமாகவும் இருக்கின்றன. உங்களின் அதிர்ஷ்ட எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி? மேலே படியுங்கள்.....
உங்கள் அதிர்ஷ்ட எண்ணைக் கண்டு பிடிப்பதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். உங்கள் அதிர்ஷ்ட எண் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்று உத்தரவாதமாக கூற முடியாது. அதே போல் உங்கள் துரதிர்ஷ்ட எண் ஒவ்வொரு முறையும் உங்களுக்குக் கெடுதலை செய்யும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலும் அதிர்ஷ்ட எண்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்ட எண்கள் தீமையையும் செய்யும் என்பது நிஜம்.
உங்கள் பிறப்பு எண்ணும் விதி எண்ணும் பொதுவாக உங்களுக்கு நன்மை செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் அந்த எண்களுக்குரிய கிரகங்கள் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கெட்டிருந்தால் அல்லது பலம் குறைந்து இருந்தால் அந்த எண்கள் உங்களுக்கு நன்மைசெய்ய முடியாது என்பதே உண்மை. அதே போல் உங்கள் ஜாதகத்தில் உள்ள அதிர்ஷ்டகரமான கிரகங்களுக்குரிய எண்கள் உங்களுக்கு நன்மை செய்யும். ஜாதகத்தில் அதிர்ஷடகரமான கிரகங்களுக்குரிய எங்கள் உங்கள் பிறப்பு அல்லது விதி எண்களாக அமைந்தால் அவை நிச்சயம் உங்களுக்கு அதிக நன்மை செய்யும் என்பது உறுதி.
பிறப்பு எண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி?
உங்கள் விதி எண்ணை கண்டு பிடிப்பது எப்படி?
\
Post a Comment